Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி ஒதுக்கியதில் தவறே இல்லை.. வெளிச்சத்திற்கு வந்த பிளான்.. மாட்ட போகும் கும்ப்ளே.. என்ன நடந்தது?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் மோசமான ஆட்டத்திற்கு அந்த அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சென்றுள்ளது.

சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இடையில் பஞ்சாப் கொஞ்சம் திமிறி எழுந்து வந்தாலும் கடைசியில் இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறி உள்ளது.

எப்படி

எப்படி

பஞ்சாப் அணியின் மோசமான தோல்விக்கு அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அணி தேர்வில் இவர் செலுத்திய ஆதிக்கம், மோசமான திட்டமிடல், அனைத்திலும் இவர் தன்னிச்சையாக செயல்பட்டது ஆகியவைதான் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள். அணியில் வீரர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

ஏன்

ஏன்

சென்னை, பெங்களூர், மும்பை போன்ற அணிகளை எடுத்துக் கொண்டால் அந்த அணிகளில் இருக்கும் கேப்டன்களுக்கு பெரிய அளவில் சுதந்திரம் இருக்கும். அணியில் ஆடும் வீரர்களை தேர்வு செய்யும் உரிமையும், திட்டங்களை வகுக்கும் உரிமையும் இருக்கும். ஆனால் பஞ்சாப் அணியில் கேப்டன் கே. எல் ராகுலுக்கு அப்படி திட்டமிடும் சுதந்திரம் எதுவும் இல்லை.

சுதந்திரம்

சுதந்திரம்

ராகுல் மட்டுமின்றி அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் யாருக்கும் அந்த சுதந்திரம் இல்லை. இதனால்தான் ஒவ்வொருமுறையும் ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் கூட பஞ்சாப் தோல்வி அடைந்தது. கும்ப்ளே முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் பஞ்சாப் அணி எதையும் சரியாக திட்டமிடவில்லை. இதனால் கும்ப்ளே மீது அணி நிர்வாகம் கோபமாக இருக்கிறது என்கிறார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

கும்ப்ளேவின் பிளான்தான் தோல்விக்கு காரணம் என்று பஞ்சாப் நிர்வாகம் கருதுகிறது என்கிறார்கள். கும்ப்ளே பயிற்சி அளித்த போது இந்திய அணியும் இதேபோல்தான் திணறியது. இந்திய அணியின் தேர்வு பெரிய அளவில் அப்போதுதான் சொதப்பியது. இதனால் கும்ப்ளே மீது அப்போதே கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே இருந்த போதும் கோலிக்கு சுதந்திரம் அளிக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதனால் கோலி அதிரடியாக செயல்பட்டு கும்ப்ளேவை நீக்க வைத்தார். கும்ப்ளேவை கோலி மொத்தமாக ஒதுக்கினார். தற்போது அதே கும்ப்ளேவிடம் பஞ்சாப் அணியும், கே. எல் ராகுல் வசமாக சிக்கி உள்ளனர்.

Story first published: Tuesday, November 3, 2020, 20:57 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+