Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அன்று பேசியது நினைவு இருக்கா?.. வார்த்தைகளால் சீண்டிய ஜிந்தா.. மொத்தமாக திருப்பி கொடுத்த கும்ப்ளே!

துபாய்: தொடர் தோல்விகளால் துவண்டு வந்த பஞ்சாப் அணி தற்போது ஐபிஎல் தொடரில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது. இந்த கம்பேக்கிற்கு கே. எல் ராகுல் மற்றும் கும்ப்ளே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடர் அடுத்தடுத்த திருப்பங்களுடன் நடந்து கொண்டு இருக்கிறது. தொடரின் தொடக்கத்தில் அதிகம் நம்பிக்கை அளித்த ராஜஸ்தான், சென்னை போன்ற அணிகள் மிக மோசமாக ஆடி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது.

தொடக்கத்தில் அடுத்தடுத்து தோல்விகளை குவித்து வந்த கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் தொடர் வெற்றிகள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளது.

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

அதிலும் பஞ்சாப் அணி இந்த தொடரில் மீண்டு வந்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிடும் என்றுதான் பலரும் கணித்து இருந்தனர். பஞ்சாப் அணிதான் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்று கணிக்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் பஞ்சாப் அணிக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை, அதற்கு நடந்த போட்டிகளில் எல்லாம் வரிசையாக வெற்றிகளை குவிக்க தொடங்கியது. அதிலும் மும்பை, டெல்லி , பெங்களூர் என்று புள்ளிகள் பட்டியலில் டாப்பில் இருக்கும் அணிகளை எல்லாம் பஞ்சாப் வீழ்த்தியது. தொடக்கத்தில் யாரிடம் எல்லாம் சுருண்டதோ அதே அணிகளை பஞ்சாப் அடித்து துவைத்து வீழ்த்தியது.

வீழ்த்தியது

வீழ்த்தியது

இதன் மூலம் 11 போட்டிகளில் 5ல் வென்றுள்ள பஞ்சாப் பிளே ஆப் ரேஸில் உள்ளது. பஞ்சாப் அணி தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த போது அணியின் பயிற்சியாளர் கும்பளே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கும்ப்ளேதான் அணியை காலி செய்துவிட்டார். அணியில் முழுக்க முழுக்க கர்நாடக அணி வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அணியின் வெற்றி மீது கும்ப்ளேவிற்கு விருப்பம் இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மோசமான பயிற்சியாளர்

மோசமான பயிற்சியாளர்

அணியில் கும்ப்ளே மட்டுமே முடிவுகளை எடுக்கிறார். வீரர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால் கும்ப்ளேவை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தே நீக்க வேண்டும் என்று இணையத்தில் பலர் கோரிக்கைகளை வைத்து இருந்தனர். அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவும் கூட கும்ப்ளே மீதுதான் கோபத்தில் இருந்தார்.

கோபம்

கோபம்

முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் தோல்வி அடைந்த போது பஞ்சாப் அணி நடத்திய ரிவ்யூ மீட்டிங்கில் இந்த பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டது. அணியில் கர்நாடக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தொடங்கி முருகன் அஸ்வின் போன்றவர்களை புறக்கணிப்பது வரை பல விஷயங்களை விவாதம் செய்தனர். இந்த ஆலோசனையில் பிரீத்தி ஜிந்தா கும்பளேவிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார் என்றும் கூட கூறப்பட்டது.

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

அணியின் தோல்விக்கு கும்ப்ளே அல்லது கே. எல் ராகுல் இருவரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். ஆனால் தற்போது விமர்சனங்களை கடந்து கும்ப்ளே தனது பஞ்சாப் அணியை மீட்டு கொண்டு வந்து இருக்கிறார். கர்நாடக வீரர்களை உட்கார வைத்துவிட்டு கெயிலை உள்ளே கொண்டு வந்து சமமான அணியை உருவாக்கி உள்ளார்.

முருகன் அஸ்வின்

முருகன் அஸ்வின்

அதேபோல் அணிக்குள் முருகன் அஸ்வினை கொண்டு வந்து பவுலிங் ஆர்டரை வலுவாக உருவாக்கி உள்ளார். மொத்தமாக விமர்சனங்கள் அனைத்திற்கும் தொடர் வெற்றிகள் மூலம் கும்ப்ளே மற்றும் கே.எல் ராகுல் இருவரும் பதிலடி கொடுத்து உள்ளனர்.

கும்ப்ளே எப்படி

கும்ப்ளே எப்படி

கும்ப்ளே எப்போதும் தனது ஐபிஎல் அணியை உணர்வு பூர்வமாக பார்த்துக்கொள்ள கூடியவர். தனது அணியின் தோல்வியை தன்னுடைய தோல்வியாக கருத கூடியவர்.. இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் கண்டிப்பாக அவரை காயப்படுத்தி இருக்கும். தற்போது இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் மொத்தமாக கும்ப்ளே திருப்பி கொடுத்து உள்ளார்.

Story first published: Sunday, October 25, 2020, 11:58 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+