Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே மேட்ச் மட்டும் தான் ஒழுங்கா ஆடினார்.. முக்கிய வீரர் பார்ம் அவுட்.. ரோஹித்துக்கு புது தலைவலி!

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் க்வின்டன் டி காக் கடந்த சில போட்டிகளில் மோசமாக ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார்.

அவரது ஆட்டத்தால் பல வகைகளில் சிக்கிக் கொண்டுள்ளார் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே டி காக் அபாரமாக ஆடி இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் நிலை

மும்பை இந்தியன்ஸ் நிலை

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோல்வி அடைந்த அந்த அணி அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. அதன் பின் பெங்களூர் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.

டி காக் ஆட்டம் எப்படி?

டி காக் ஆட்டம் எப்படி?

துவக்க வீரர் க்வின்டன் டி காக் முதல் போட்டியில் மட்டுமே சிறப்பாக ஆடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சௌரப் திவாரி தவிர மற்ற மும்பை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போது டி காக் மட்டுமே சிறப்பாக ஆடினார். 20 பந்துகளில் 33 ரன்கள் குவித்து இருந்தார்.

சொற்ப ரன்கள்

சொற்ப ரன்கள்

ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கின் போது 15 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து அணியை சிக்கலில் ஆழ்த்தினார்.

டக் அவுட்

டக் அவுட்

இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் டக் அவுட் ஆனார் டி காக். தொடர்ந்து மூன்று போட்டிகளில் டி காக் மோசமாக ஆடி இருக்கும் நிலையில் அவர் பார்ம் குறித்த கவலை எழுந்துள்ளது.

ரோஹித் சர்மாவுக்கு அழுத்தம்

ரோஹித் சர்மாவுக்கு அழுத்தம்

ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் தலைவலி ஏற்பட்டுள்ளது. டி காக் உடன் துவக்கம் அளித்து வரும் ரோஹித், அவர் விக்கெட் விரைவாக வீழ்ந்தால் அல்லது பந்துகளை வீணடித்தால் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்.

மாற்று வீரர் சிக்கல்

மாற்று வீரர் சிக்கல்

கேப்டனாக டி காக் பார்ம் குறித்து யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் ரோஹித் சர்மா. டி காக் உலகின் முன்னணி பேட்ஸ்மேன் என்றாலும் அவருக்கு ஒரீரு போட்டிகளில் ஓய்வு அளிக்கலாம் என்றாலும் சரியான மாற்று துவக்க வீரர் இன்றி தடுமாறி வருகிறார்.

வாய்ப்பு கிடைக்கும்

வாய்ப்பு கிடைக்கும்

க்வின்டன் டி காக் மோசமாக ஆடினாலும் அவருக்கு மேலும் சில போட்டிகளில் வாய்ப்பு அளிப்பதை தவிர ரோஹித் சர்மாவுக்கு வேறு வழியில்லை. அதனால், டி காக் வாய்ப்புக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை. அடுத்து வரும் போட்டிகளில் அவர் ஆடுவதை பொறுத்தே மாற்றம் இருக்கும்.

Story first published: Friday, October 2, 2020, 11:58 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+