Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

45 பந்தில் 70 ரன்.. திட்டம் போட்டு ஆடிய ஹிட்மேன்.. சின்னாபின்னமான பஞ்சாப்!

அபுதாபி : ரோஹித் சர்மா மீண்டும் ஒரு அபாரமான ஆட்டம் ஆடி மும்பை அணியை காப்பாற்றினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தவித்த போது ரோஹித் சர்மா பொறுப்பாக ஆடி மும்பை இந்தியன்ஸ் அணியை பெரிய இலக்கை எட்ட காரணமாக இருந்தார்.

திட்டமிட்டு ஆடிய இந்த இன்னிங்க்ஸில் ரோஹித் சர்மா 70 ரன்கள் குவித்தார்.

பஞ்சாப் பந்துவீச்சு

பஞ்சாப் பந்துவீச்சு

2020 ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் துவக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தி அதிரடி காட்டியது.

2 விக்கெட் காலி

2 விக்கெட் காலி

மும்பை அணியின் துவக்க வீரர் டி காக் முதல் ஓவரில் டக் அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் ரன் அவுட் ஆனார். 21 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்தது. அப்போது ரோஹித் சர்மா நிலையாக நின்று ஆடினார்.

ரோஹித் நிதான ஆட்டம்

ரோஹித் நிதான ஆட்டம்

இஷான் கிஷனுடன் இணைந்து அடுத்து விக்கெட் விழாமல் ஆடினார் ரோஹித் சர்மா. ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாகவே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்து வந்தது. எனினும், ரோஹித் கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடிக் கொள்ளலாம் என திட்டமிட்டு ஆடினார்.

அதிரடி

அதிரடி

சரியாக 16வது ஓவரில் தன் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அந்த ஓவரில் 2 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார் ரோஹித். அரைசதமும் கடந்து அசத்தினார். அடுத்த ஓவரிலேயே ரோஹித் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

ரோஹித் சர்மா 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். 8 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் சென்ற பின் பொல்லார்டு மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

மும்பை ஸ்கோர்

மும்பை ஸ்கோர்

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 45 பந்துகளில் 70, பொல்லார்டு 20 பந்துகளில் 47, ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் 30 ரன்கள் குவித்து இருந்தனர்.

Story first published: Friday, October 2, 2020, 11:58 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+