Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லோரும் போய்விட்டனர்.. ஐபிஎல்லால் சிக்கலில் முக்கிய வீரர்கள்.. மாறும் இந்திய அணியின் எதிர்காலம்!

துபாய்: ஐபிஎல் 2020 தொடர் காரணமாக இந்தியாவின் முக்கியமான வீரர்கள் பல காயம் அடைந்துள்ளனர். மூத்த வீரர்கள் பலர் மொத்தமாக இதனால் பிட்னஸை இழந்துள்ளனர்.

2020 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.

இந்த வருடத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக ஐபிஎல் மாறியுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு பின்பாக.. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள இருக்கிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக பல முக்கியமான வீரர்கள் தொடரில் இடம்பெறவில்லை.

எப்படி

எப்படி

இந்திய அணியில் ரோஹித் சர்மா முன்பே காயம் காரணமாக இடம்பெறவில்லை. தற்போது இவர் ஒருநாள், டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு, டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஆடவில்லை.

தொடருக்கு தேர்வான வீரர்கள்

தொடருக்கு தேர்வான வீரர்கள்

இன்னொரு பக்கம் இந்த தொடருக்கு தேர்வான வீரர்கள் சிலரும் காயம் காரணமாக வெளியேறினார்கள். வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அதேபோல் கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக நெட் பவுலிங் குழுவில் இருந்து வெளியேறி உள்ளார்.

சாஹா

சாஹா

இன்னொரு விர்த்திமான் சாகா இந்திய அணியில் காயம் காரணமாக இடம் பிடிப்பது சந்தேகம் ஆகியுள்ளது. பண்ட் காயத்தில் இருந்து விடுபட்டாலும் இன்னும் முழு பிட்னஸ் பெறவில்லை, இதனால் இவர் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. ஷ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இவர்கள் எல்லோருமே ஐபிஎல் தொடரின் போது காயம் அடைந்த வீரர்கள்.

இப்படி இந்திய அணியின்

இப்படி இந்திய அணியின்

இப்படி இந்திய அணியின் மூத்த வீரரக்ள் எல்லோரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக இந்திய அணியில், புவி, ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் நீக்கப்பட்டு, ஷ்ரேயாஸ், பிரித்வி ஷா, நடராஜன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலம்

எதிர்காலம்

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த வருடம் நடக்கும் உள்ள நிலையில், இப்போதே இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மூத்த வீரர்கள் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

காயம்

காயம்

பல மூத்த வீரர்களின் எதிர்காலத்தையே காயம் முடக்கி போட்டுள்ளது. இவர்களில் பலர் மீண்டும் அணிக்கு திரும்புவதே கஷ்டம் என்கிறார்கள். இந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்கள் கலக்கும் நிலையில் இந்திய அணியில் இவர்கள் நிரந்தரமாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, November 10, 2020, 14:42 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+