நான் தேவையில்லை.. நீ போ.. சிஎஸ்கேவின் அஸ்திவாரத்தை ஆட்டிய பொல்லார்ட்.. களத்தில் பரபர சம்பவம்!
c: சிஎஸ்கேவின் அஸ்திவாரத்தையே இன்று மும்பை அணி அசைத்து பார்த்து உள்ளது. அதிலும் மும்பை அணியின் ஒருநாள் கேப்டன் பொல்லார்ட் மொத்தமாக சிஎஸ்கே அணியை காலி செய்துள்ளார்.
2020 ஐபிஎல் தொடரில் மிக மோசமான அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் சென்னை அணி மிக மோசமான சரிவை சந்தித்து உள்ளது.
இதுவரை நடந்த 10 போட்டிகளில் 7 போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

எப்படி
இந்த நடந்த போட்டியில் சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அடுத்தடுத்து சீட்டு கட்டு போல வரிசையாக அவுட்டாகி வெளியேறினார்கள். வயதான வீரர்கள் சரியாக ஆடவில்லை என்று இளம் வீரர்களை அணியில் எடுத்தால்.. நாங்கள் இன்னும் மோசமாக ஆடுவோம் என்று சிஎஸ்கேவின் இளம் படை நிரூபித்து உள்ளனர். மிக மோசமாக ஆடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து உள்ளனர்.

விக்கெட் எப்படி
முதல் 9 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே மிக மோசமாக ஆடி உள்ளது.
- முதல் ஓவரில் ரூத்து ராஜ் அவுட் ஆனார்.
- அடுத்த ஓவரிலேயே அம்பதி ராயுடு, ஜெகதீசன் இரண்டு பேரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
- போல்ட் போட்ட 3வது ஓவர் மற்றும் 5வது ஓவரில் அடுத்தடுத்து டு பிளசிஸ், ஜடேஜா இருவரும் அவுட் ஆனார்கள்
- அதன்பின் 7வது ஓவரில் தோனி அவுட்டானார்.
- 9வது ஓவரில் தீபக் சாகர் அவுட் ஆனார்.

மிக மோசம் ஏன்
சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் களத்தில் என்ன நடக்கிறது என்று நினைத்து பார்க்கும் முன் வரிசையாக பேட்ஸ்மேன்கள் எல்லோரும் விக்கெட்டுகளை இழந்தனர். யாருமே நினைத்து பார்க்காத வகையில் இன்று மும்பை அணியின் பவுலிங் இருந்தது. பொதுவாக ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் போது புதிய பந்தில் பும்ரா ஓவர் போட மாட்டார்.

புதிய பந்து
புதிய பந்தில் எப்போதும் பும்ரா ஓவர் போட்டது இல்லை. ஆனால் இன்று புதிய பந்திலேயே பும்ராவிற்கு இரண்டாவது ஓவரை பொல்லார்ட் கொடுத்தார். சிபிஎல் தொடரில் கேப்டனாக இருக்கும் பொல்லார்ட் அதே திறமையை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தினார். அதேபோல் பும்ரா ஓவர் முடிந்ததும் ராகுல் சாகரை பொல்லார்ட் களத்திற்கு கொண்டு வந்தார்.

களத்திற்கு வந்தனர்
தோனி பேட்டிங் செய்கிறார் என்று தெரிந்ததும் ராகுல் சாகருக்கு தோனி ஓவர் கொடுத்தார். சரியாக தோனி லெக் ஸ்பின்னர் பவுலிங்கில் அவுட் ஆனார். இதெல்லாம் போக அடுத்தடுத்து பொல்லார்ட் கொடுத்த பவுலிங் ரொட்டேஷன் சிஎஸ்கேவை உடைத்து போட்டது. அதிலும் பொல்லார்டின் பீல்டிங் செட்டப் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது.

பொல்லார்ட்
பொல்லார்ட் கேப்டன்சியை கண்டிப்பாக இன்று பாராட்டியே ஆக வேண்டும். இன்று ரோஹித் இல்லாத காரணத்தால் சிஎஸ்கே வெற்றி அடையும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித்தோ.. சிஎஸ்கே டீமிற்கு எல்லாம் நான் தேவையில்லை நீயே போ என்று பொல்லார்ட்டை அனுப்பி வைத்தார். பொல்லார்ட்டும்.. மிக எளிதாக சிஎஸ்கே அணியை அசைத்து பார்த்து உள்ளார்.


Click it and Unblock the Notifications