Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே எதிர்பார்க்காத படுதோல்வி.. பும்ரா, போல்ட் வேகத்தில் அரண்டு போன டெல்லி.. ஐபிஎல் பைனலில் மும்பை

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

டெல்லி கேபிடல்ஸ் அணி ரன்னே எடுக்காமல் 3 விக்கெட்களை இழந்து சேஸிங் செய்யத் துவங்கியது. பின் மோசமாக ஆடி 57 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது அந்த அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தினர்.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸில் தோல்வி அடைந்து முதாளில் பேட்டிங் செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது சாதகமான முடிவாக முதலில் பார்க்கப்பட்டது. துவக்க வீரர் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். ஆனால், அதன் பின் மும்பை அணியின் இளம் வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர்.

இமாலய ஸ்கோர்

இமாலய ஸ்கோர்

டி காக் 40, சூர்யகுமார் யாதவ் 51, இஷான் கிஷன் 55*, ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 37 ரன்கள் குவித்தனர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

டெல்லி அணி அடுத்து சேஸிங் செய்யத் துவங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், அஜின்க்யா ரஹானே என அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் வரிசையாக டக் அவுட் ஆனார்கள்.

ஸ்டோய்னிஸ் போராட்டம்

ஸ்டோய்னிஸ் போராட்டம்

அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி ஆட்டம் ஆடி 46 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அவரும் ஆட்டமிழந்த பின் டெல்லி அணி நம்பிக்கை இழந்தது. அக்சர் பட்டேல் 42 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.

பும்ரா மிரட்டல்

பும்ரா மிரட்டல்

பும்ரா இந்தப் போட்டியில் மிரட்டலாக பந்து வீசி இருந்தார். 4 ஓவர்களில் ஒரு டபுள் விக்கெட் மெய்டன் உட்பட 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ட்ரென்ட் போல்ட் 2 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி இப்படி ஒரு மரண அடியை எதிர்பார்க்கவில்லை. மும்பை அணி குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இந்தப் போட்டி.

இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. டெல்லி அணி தற்போது இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆடி வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

Story first published: Thursday, November 5, 2020, 23:44 [IST]
Other articles published on Nov 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+