For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காயம் ஒண்ணும் பெருசா இல்லைங்க... இறுதிப்போட்டியில் போல்ட் கண்டிப்பா விளையாடுவார்... ரோகித் நம்பிக்கை

துபாய் : நேற்றைய ஐபிஎல்லின் தகுதிச்சுற்று முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் அதிரடியாக முறையே 4 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆயினும் காயம் காரணமாக டிரெண்ட் போல்ட் 2 ஓவர்களிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார். 2 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் போல்ட்.

மும்பை -டெல்லி மோதல்

மும்பை -டெல்லி மோதல்

நேற்றைய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் தகுதிச்சுற்று முதல் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், போட்டி சிறப்பாக கைமாறியது.

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 201 ரன்களை இலக்காக அமைத்தது. அந்த அணியின் ரோகித் சர்மா மற்றும் கிரன் பொல்லார்ட் ஆகியோர் டக்அவுட் ஆன நிலையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் டீ காக் ஆகியோரின் அதிரடி ஆட்டம் அந்த அணியை நேரிடையாக இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றது.

6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்

6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்

இதுமட்டுமின்றி அடுத்ததாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற அணியின் ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகியோரின் அதிரடி பௌலிங் காரணமாக அமைந்தது. பும்ரா 4 விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை அதிகமான ரன்களை கொடுக்காமல் வீழ்த்தினர்.

டிரெண்ட் போல்ட் சிறப்பு

டிரெண்ட் போல்ட் சிறப்பு

முக்கியமாக இடுப்பில் வலி இருந்த போதிலும் டிரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே டெல்லியின் பிரித்வி ஷா மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 ஓவர்கள் மட்டுமே போட்ட அவர் 9 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இந்நிலையில் வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

டிரெண்ட் போல்ட் குறித்து ரோகித் நம்பிக்கை

டிரெண்ட் போல்ட் குறித்து ரோகித் நம்பிக்கை

வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப்போட்டிக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், டிரெண்ட் போல்ட் இறுதிப்போட்டியில் பங்கேற்பார் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

சிறப்பான துவக்கத்திலேயே கவனம்

சிறப்பான துவக்கத்திலேயே கவனம்

தாங்கள் எப்போதுமே இலக்கை குறிவைத்து விளையாடுவதில்லை என்றும் தாங்கள் வித்தியாசமான அணி மற்றும் வித்தியாசமாக விளையாடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ள ரோகித் சர்மா, சிறப்பான துவக்கத்தை கவனத்தில் கொண்டு தாங்கள் ஆடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, November 6, 2020, 7:23 [IST]
Other articles published on Nov 6, 2020
English summary
We are a different team and we play differently -Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+