Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப எங்க நிலைமை இதுதான்.. டாஸ் வென்ற மும்பை.. நொந்து போய் புலம்பிய பஞ்சாப் கேப்டன்!

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்றது.

அப்போது பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் தங்கள் அணியின் நிலையை குறித்து புலம்பித் தள்ளினார்.

தாங்கள் இப்போது டாஸ் வெற்றி குறித்தெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை என அவர் கூறியது பரிதாபமாக இருந்தது.

பஞ்சாப் நிலை

பஞ்சாப் நிலை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2020 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸில் தோல்வி அடைந்தது. அப்போது கேப்டன் கேஎல் ராகுல் பேசியது பரிதாபமாக இருந்தது.

தோல்விகள்

தோல்விகள்

பஞ்சாப் அணியில் நல்ல வீரர்கள் இருந்தும் அந்த அணியால் லீக் சுற்றில் அதிக வெற்றிகள் பெற முடியவில்லை. எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் மும்பை அணியை சந்தித்தது.

டாஸில் தோல்வி

டாஸில் தோல்வி

அந்த அணி தன்னம்பிக்கை இழந்து காணப்படும் நிலையில், மும்பை அணியிடம் டாஸில் தோல்வி அடைந்தது. அப்போது பேசிய ராகுல் தங்கள் அணி தற்போது டாஸ் வெற்றி குறித்து யோசிக்கும் நிலையில் இல்லை. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதை பற்றி மட்டுமே யோசித்து வருகிறோம் என்றார்.

பரிதாபம்

பரிதாபம்

அவர் கூறிய விதம் பரிதாபமாக இருந்தது. கடந்த சீசனிலும் பஞ்சாப் அணி மோசமாக ஆடினாலும், இத்தனை மோசமாக தோல்விகளை சந்திக்கவில்லை. கேப்டன், பயிற்சியாளரை மாற்றியும் பஞ்சாப் அணி நிலை மாறவில்லை. இந்தப் போட்டியில் மும்பை அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

Story first published: Sunday, October 18, 2020, 21:44 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+