இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்!
அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் கடந்த சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தால் தனி ஆளாக மும்பை அணியை சுமந்து வருகிறார்.
அவரைப் பற்றி 9 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளார் ரோஹித் சர்மா. அது குறித்த ட்வீட் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவரது அதிரடி ஆட்டம் பெரிதும் பேசப்பட்ட நிலையில், இந்த பதிவு தற்போது பரவி வருகிறது.

அதிரடி ஆட்டம்
சூர்யகுமார் யாதவ் கடந்த இரு போட்டிகளில் 70+ ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

2011இல் போட்ட ட்வீட்
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் சர்மா 2011இல் போட்ட ட்வீட் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அப்போதே அவரது திறமையை கண்டு இவர் பெரிய வீரராக வருவார் என பதிவிட்டுள்ளார் ரோஹித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணியில்..
அதே போல, சூர்யகுமார் யாதவ் மும்பை மாநில அணியில் தன் திறமையால் ரன் குவித்து, மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியிலும் இடம் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார்.

இந்திய அணியில் சேர்க்க வேண்டும்
சர்வதேச வீரர்களுக்கு இணையாக அவர் ஆடி வருகிறார். அவரது திறமையை கண்டு வெளிநாட்டு வீரர்கள் கூட அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிசிசிஐ மற்றும் கேப்டன் விராட் கோலி அவரை தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications