For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்க 2 பேரா? ரோஹித் வைத்த ட்விஸ்ட்.. மூன்றே ஓவரில் ராஜஸ்தான் சரண்டர்.. 2 டக் அவுட் வேறு!

துபாய் : மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா செய்த ஒரு சிறிய மாற்றத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தமாக சரிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வி அடைந்து இருந்தது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் மோசமாக ஆடி தோல்வி அடைந்து தன் சோகத்தை தொடர்ந்தது.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள் தான். மும்பையின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. ஆனால், அதை விட பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அதிலும் பும்ரா தன் உச்சகட்ட பார்மில் இருந்தார்.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டி காக் 23, ரோஹித் சர்மா 35, இஷான் கிஷன் 0, க்ருனால் பட்னா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 79, ஹர்திக் பாண்டியா 30 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை ஸ்கோர் என்ன?

மும்பை ஸ்கோர் என்ன?

மும்பை அணி 193 ரன்கள் குவித்தது. இது பெரிய இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியால் 200 ரன்களை சேஸிங் செய்ய முடியும் என கருதப்பட்டது. இந்த நிலையில், தான் பந்துவீச்சில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்தார் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா.

ட்ரென்ட் போல்ட் - ஜேம்ஸ் பாட்டின்சன்

ட்ரென்ட் போல்ட் - ஜேம்ஸ் பாட்டின்சன்

கடந்த நான்கு போட்டிகளில் ட்ரென்ட் போல்ட் - ஜேம்ஸ் பாட்டின்சன் துவக்க பந்துவீச்சாளர்களாக பவர்பிளேவில் பந்து வீசி வந்தனர். மற்றொரு சிறந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மத்திய ஓவர்களில் பந்து வீசி வந்தார். அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

துவக்க ஜோடி

துவக்க ஜோடி

இந்த நிலையில், இந்தப் போட்டியில் பந்துவீச்சில் துவக்க ஜோடியை மாற்றினார் ரோஹித் சர்மா. ட்ரென்ட் போல்ட் உடன் பும்ரா பந்து வீசினார். போல்ட் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வாலை பவுல்டு அவுட் செய்தார்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

அடுத்து இரண்டாவது ஓவரை வீச வந்த பும்ரா, ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை சாய்த்தார். அடுத்து மூன்றாவது ஓவரில் போல்ட், சஞ்சு சாம்சனை டக் அவுட் ஆக்கி அனுப்பி வைத்தார். 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறத் துவங்கியது.

தோல்வி உறுதி

தோல்வி உறுதி

அப்போதே அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது. அதன் பின் விக்கெட் வீழ்ச்சி மற்றும் ரன் ரேட் அழுத்தத்தில் சிக்கிய ராஜஸ்தான் அணி 136 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி 57 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பும்ரா 4 விக்கெட்

பும்ரா 4 விக்கெட்

பும்ரா 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ட்ரென்ட் போல்ட் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பாட்டின்சன் 2, ராகுல் சாஹர் 1, பொல்லார்டு 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

Story first published: Tuesday, October 6, 2020, 23:34 [IST]
Other articles published on Oct 6, 2020
English summary
IPL 2020 News in Tamil : Mumbai Indians got 3 wickets in powerplay with the help of Bumrah and Trent Boult.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+