Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட யார் இது.. பரபரப்பான மும்பை-டெல்லி போட்டிக்கு இடையே.. மைதானத்தில் இவரா.. அதுவும் இவ்வளவு ஸ்டைலா!

துபாய்: இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது மைதானத்திற்கு முக்கியமான நடிகர் ஒருவர் வந்திருந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி தற்போது துபாயில் நடந்து வருகிறது. மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் ஐபிஎல் இறுதி போட்டி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச் என்பதால்.. டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ஆனால் பேட்டிங் இறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து திணறி வந்தது. முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். அதன்பின் ரஹானேவும் 2 ரன்களில் அவுட் ஆனார். பின் தவானும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். வரிசையாக போல்ட் 2 விக்கெட்டுகளை முதல் பவர் பிளேவிலேயே எடுத்தார்.

எப்படி

எப்படி

டெல்லி அணி இப்படி மோசமாக திணறி வந்த நிலையில்.. இன்று மைதானத்திற்கு மலையாள ஹீரோ மோகன்லால் வந்திருந்தார். ஆடியன்ஸ் இருக்கும் பகுதியில் இருந்து மோகன்லால் மேட்ச் கண்டுகளித்து வருகிறார். இவர் கோட் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருந்தார்.

ஏன்

ஏன்

கொரோனா காரணமாக.. இந்த முறை ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே மைதானத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சிறப்பு அனுமதி பெற்று மோகன்லால் இன்று போட்டியை கண்டுகளித்தார்.

என்ன காரணம்

என்ன காரணம்

மைதானத்தில் இவரை பார்த்த பலரும்.. அட இவரா என்று ஆச்சர்யம் அடைந்தனர். துபாயில் படப்பிடிப்பு ஒன்றுக்காக மோகான்லால் சென்று இருக்கிறார். அங்கு இருந்து பைனல் போட்டியை காண்பதற்காக இவர் வந்துள்ளார்.

Story first published: Tuesday, November 10, 2020, 20:04 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+