Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா? அதுவும் மும்பை இந்தியன்ஸ் பற்றி.. தோனி பரபர பேச்சு!

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இந்த தொடரில் நன்றாக ஆடி உள்ளது, மற்ற அணிகள் எல்லாம் இந்த சீசனில் மோசமாக சொதப்பிவிட்டது என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குறிப்பிட்டுள்ளார்.

2020 ஐபிஎல் சீசன் ஏறத்தாழ முடிவிற்கு வந்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணி மிகவும் வலுவான அணியாக உருவெடுத்து உள்ளது. மற்ற எல்லா அணிகளும் பிளே ஆப் கூட செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் சிஎஸ்கே, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

பாராட்டு

பாராட்டு

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தை கேப்டன் தோனி பாராட்டி உள்ளார் . தோனி தனது பேட்டியில் இந்த தொடரில் 6-7 போட்டிகள் மிகவும் கடினமாக இருந்தது. தொடர் தோல்விகளால் டிரெஸ்ஸிங் ரூமே களையிழந்து இருந்தது. என்ன திட்டம் போட்டாலும், எந்த பிளானை கொண்டு வந்தாலும் டிரெஸ்ஸிங் ரூம் தொடர்ந்து சோகமாகவே இருந்தது. இது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

வலுவான அணி

வலுவான அணி

நங்கள் ஒரு வலுவான அணியை அடுத்த சீசனில் உருவாக்க வேண்டும். நாங்கள் வலிமையாக மீண்டும் வருவோம். அதுதான் எங்கள் ஸ்டைல். இந்த வருடம் எங்களுக்கு மோசமாக இருந்தது. இந்த வருட சீசனில் எல்லா அணிகளும் நன்றாக ஆடியது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே சிறப்பாக ஆடியது..மற்ற அணிகள் போராடியது என்றும் கூறலாம்.

முக்கியம்

முக்கியம்

மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற அணிகளை விட மிகவும் சிறப்பாக ஆடியது. இந்த தொடரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதே முக்கியம். இதில் நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் நடந்து உள்ளது. என்னுடைய டீ ஷர்டை பலர் வாங்கினார்கள். இதனால் நான் ஓய்வு பெற போகிறேன் என்று பலர் நினைத்துக் கொண்டனர். நான் ஓய்வு பெற போவது இல்லை.

ரூத்துராஜ் ஆட்டம்

ரூத்துராஜ் ஆட்டம்

ரூத்துராஜ் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ரூத்துராஜ் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரால் கொரோனா காரணமாக தொடக்கத்தில் சரியாக ஆட முடியவில்லை . அவரால் தொடரின் முதல் 20 நாட்களில் பயிற்சியே மேற்கொள்ள முடியவில்லை. அவரால் பிட்னசுக்கு திரும்ப முடியவில்லை.

திறமை

திறமை

அவர் தொடக்கத்தில் சரியாக ஆடாத காரணத்தால், அவரின் திறமையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால்தான் நாங்கள் டு பிளசிஸ் , வாட்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினோம். ஆனால் அது வேலை செய்யவில்லை. ஆனால் அது ஒன்னும் அவ்வளவு மோசமான விஷயம் இல்லை.

சரியான பங்களிப்பு

சரியான பங்களிப்பு

மூத்த வீரர்களால் சரியான பங்களிப்பை கொடுக்க முடியும். சில சமயம் அப்படித்தான் நடக்கும். அடுத்த ஐபிஎல் தொடருக்கு நீண்ட நாட்கள் கிடையாது. இன்னும் சில நாட்களில் அடுத்த தொடர் நடக்க உள்ளது. இந்த முறை லாக்டவுனும் கிடையாது. இதனால் முறையாக பயிற்சி மேற்கொள்ள முடியும்.. லாக்டவுன் இல்லாத காரணத்தால் சிறப்பாக திட்டங்களை வகுக்க முடியும், என்று கூறியுள்ளார்.

பாராட்டி உள்ளார்

பாராட்டி உள்ளார்

தோனி தனது பேச்சில் எந்த டென்ஷனும் இல்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு மும்பை அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படையாக பாராட்டி உள்ளார். மும்பை அணிக்கும் சிஎஸ்கேவிற்கும் பகை என்று பலர் கூறி வரும் நிலையிலும்..தோனி வெளிப்படையாக மும்பை அணியை பாராட்டி இருக்கிறார்.

Story first published: Monday, November 2, 2020, 10:01 [IST]
Other articles published on Nov 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+