மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை!
அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று ''கட்டுக் கடங்காத காட்டு அடி'' அடித்தார். இன்றைய போட்டியில் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கின் போது சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது.இந்த போட்டியில் ஹிட்மேன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் அபுதாபியில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது . இதில் கொல்கத்தா டாஸ் வென்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் முதலில் இருந்தே மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒரு பக்கம் ரோஹித் சர்மாவும், இன்னொரு சூர்யா குமார் யாதவும் மாறி மாறி கொல்கத்தா பவுலிங்கை பொளந்து கட்டினார்கள்.

எப்படி
இந்த போட்டியில் ரோஹித் சர்மா நிலைத்து நின்று ஆட தொடங்கியதும் சரியாக, தினேஷ் கார்த்திக் பேட் கும்மின்ஸ்க்கு ஓவர் கொடுத்தார். இவரை கொல்கத்தா அணி 15.50 கோடி ரூபாய்க்கு எடுத்தனர். இதனால் இந்த போட்டியில் கண்டிப்பாக கும்மின்ஸ் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா இந்த 15 கோடிகளை அடித்து பறக்க விட்டார்.

கும்மின்ஸ்
ஆம், மில்லியன் டாலர் பேபி கும்மின்ஸ் போட்ட ஷார்ட் பந்துகளை எல்லாம் எல்லா திசைக்கும் பறக்க விட்டார். பொதுவாகவே ஷார்ட் பந்துகளில் ரோஹித் அடித்து வெளுக்கும் திறன் கொண்டவர். இந்த போட்டியிலும் அதேபோல் மரண மாஸ் ஆட்டம் ஆடினார். அதிலும் ஐந்தாவது ஓவரின் முதல் மற்றும் 5வது பந்தில் அடுத்தடுத்து ரோஹித் சிக்ஸ் பறக்க விட்டார்.

எத்தனை கோடி
உங்களை எத்தனை கோடிக்கு எடுத்தால் என்ன, நான் சிக்ஸ் பறக்க விடுவேன் என்று, பந்துகளை பறக்க விட்டார். அதோடு, ரசல் ஓவரில் சிக்ஸர் பறக்க விட்டார். தொடக்கத்தில் முதல் ஓவரில் வாரியர் பந்துகளையும், ரோஹித் சிக்ஸர் அடித்தார். இதில் ரோஹித் அடித்த சிக்ஸ் ஒன்று மைதானத்தை தாண்டி, வெளியே சென்றது. இதனால் புதிய பந்து கொண்டு வரும் நிலை கூட ஏற்பட்டது.

ரோஹித் சர்மா
இதன் மூலம் ரோஹித் சர்மா மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். சென்னைக்கு எதிரான போட்டியில் 10 பந்துகளில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார். ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. ஆனால் இந்த போட்டியில் இப்போதே ரோஹித் 6 சிக்ஸ் அடித்து அரை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் இவர் 200 சிக்ஸ் அடித்துள்ளார்.

அபுதாபி
அபுதாபி மைதானத்தில் எங்கு மோசமாக சொதப்பினரோ அதே மைதானத்தில் ரோஹித் தன்னை சிக்ஸர்கள் மூலம் நிரூபித்து இருக்கிறார்... கடந்த சில வருடங்களில் ஐபிஎல் போட்டியில் சரியாக ஆடாத ரோஹித் தற்போது கொல்கத்தாவை அடித்து துவம்சம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications