தேவையில்லாத ரிஸ்க் எடுத்த ரோஹித் சர்மா.. மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு.. எம்ஐ ரசிகர்கள் ஷாக்!
அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று தேவையில்லாத ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர் கொள்கிறது. இன்று நடக்கும் போட்டி மும்பை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் அபுதாபியில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

என்ன மைதானம்
இந்த போட்டி நடக்கும் அபுதாபி மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். இங்கு நேரம் செல்ல செல்ல பனி அதிகம் ஆகும். குளிர் அதிகம் ஆகும். இதனால் குளிரில் பீல்டிங் செய்வது கடினம். அதேபோல் இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்வதும் கடினம். அதேபோல் இங்கு முதல் இன்னிங்சில் ஸ்பின் நன்றாக எடுபடும்.

சென்னை மைதானம்
கடந்த முறை சென்னை மும்பை இடையே இதே மைதானத்தில்தான் போட்டி நடந்தது. அந்த போட்டியில் சென்னை அணிக்கு ஸ்பின் கை கொடுத்தது. பியூஸ் சாவ்லா, சாம் கரன், ஜடேஜா, என்று எல்லோரும் சென்னைக்கு நன்றாக பவுலிங் செய்தனர். மும்பையிடம் சரியாக ஸ்பின் ஆப்ஷன் இல்லாததால் தோல்வி அடைந்தது.

என்ன எதிர்பார்ப்பு
இதனால் இன்று நடக்கும் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிக்கு எதிராக கூடுதல் ஸ்பின் பவுலர்களை இறக்கும். 4 ஸ்பின் பவுலர்கள் உடன் மும்பை இறங்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டது. அபுதாபி மைதானத்தை மும்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஷாக்கிங்
ஆனால் ஷாக்கிங் திருப்பமாக மும்பை அணி அதே அணியுடன் விளையாடுகிறது. சென்னைக்கு எதிராக ஆடிய அதே மும்பை அணி இன்றும் ஆடும். மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீ காக், சூர்யா குமார் யாதவ், திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, பேட்டின்சன், ராகுல் சார், டிரெண்ட் போல்ட் , பும்ரா ஆகியோர் உள்ளனர்.

பெரிய ரிஸ்க்
இது மும்பை எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் என்று கூறுகிறார்கள்.மும்பை அணியில் கூடுதல் ஸ்பின் பவுலர்களை கொண்டு வந்து இருக்கலாம். தேவையில்லாமல் ரோஹித் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications