Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முறைத்தார்.. வீழ்ந்துவிட்டார்.. களத்திற்கு வெளியிலும் கோலியை காலி செய்த மும்பை.. என்னதான் நடந்தது?

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணி வேண்டும் என்றே பெங்களூர் கேப்டன் கோலியை வம்பிழுத்து உள்ளது. தேவையில்லாமல் கோலியை மும்பை அணி மீண்டும் சீண்டி இருக்கிறது.

பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான மோதல் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இந்த சீஸனின் தொடக்கத்தில் சிஎஸ்கே சொதப்பியதால்.. எப்போதும் நடக்கும் மும்பை vs சிஎஸ்கே மோதல் இந்த முறை நடக்கவில்லை.

மாறாக மும்பை vs பெங்களூர் மோதலாக இது உருவெடுத்து உள்ளது. பெங்களூர் அணிக்கும் மும்பை அணிக்கும் இடையில் களத்திலும் களத்திற்கு வெளியிலும் கொஞ்சம் கூட யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று எப்படி

நேற்று எப்படி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் தற்போது பல்வேறு விஷயங்களால் மோதல் நிலவி வருகிறது. முதல் விஷயம் கோலி மற்றும் ரோஹித் இடையே இருக்கும் உரசல். இந்திய அணியின் கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கோலி திட்டமிட்டு வருகிறார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் பதவியை எப்படியாவது அடைய வேண்டும் என்று ரோஹித் சர்மாவும் திட்டமிட்டு வருகிறார்.

திட்டம் என்ன

திட்டம் என்ன

எப்படியாவது இந்திய அணிக்குள் கேப்டனாக உருவெடுக்க ரோஹித் சர்மா முயற்சி செய்து வருகிறார். தனது சிறப்பான ஐபிஎல் ரெக்கார்ட் மூலம் ரோஹித் சர்மா கேப்டன்சி திறமையை நிரூபித்துவிட்டார். கோலியை விட ஐபிஎல்லில் தான்தான் சிறந்த கேப்டன் என்பதை ரோஹித் நிரூபித்துவிட்டார். இதனால் இந்திய அணிக்கும் நிரந்தர கேப்டனாக வேண்டும் என்று ரோஹித் சர்மா திட்டமிடுகிறார் .

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

ஆனால் கோலி தனது கேப்டன்சியை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் எல்லாம் இல்லை. கோலி ஒரு படி மேலே போய் மொத்தமாக ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியிலேயே வாய்ப்பு கொடுக்காமல் தவிர்த்துள்ளார். காயத்தை காரணம் காட்டி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவை மொத்தமாக காலி செய்ய கோலி திட்டமிட்டு வருகிறார்.

இன்னொரு காரணம்

இன்னொரு காரணம்

இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் கோலி விரும்பவில்லை. பும்ரா, பாண்டியா தவிர மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க கோலிக்கு விருப்பம் இல்லை. இதனால்தான் சூர்ய குமார் , இஷான் கிஷான் போன்றவர்களை கோலி கண்டுகொள்வது இல்லை.

எப்படி

எப்படி

இதனால்தான் நேற்று முதல் நாள் களத்தில் மும்பை - பெங்களூர் அணி வீரர்களுக்கு இடையே கடுமையான உரசல் நிலவியது. சூர்யா குமார் யாதவ் கோலி மோதல், பாண்டியா கிறிஸ் மோரிஸ் மோதல், குர்னால் சாஹல் மோதல் என்று மைதானத்தில் பெரிய பரபரப்பு நிலவியது. தற்போது இந்த மோதலை மைதானத்திற்கு வெளியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டு வந்துள்ளது.

என்ன செய்தது

என்ன செய்தது

அதன்படி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி செய்த டிவிட்டில், அவர் வந்தார்.. அவர் முறைத்து பார்த்தார்.. அவர் வென்றார் என்று கோலி சூர்யா குமார் யாதவ் இருவரும் இருக்கும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. கோலி வீழ்ந்துவிட்டார் என்று கூறும் விதத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த டிவிட்டை செய்துள்ளது.

சண்டை

சண்டை

இதனால் இருவருக்கும் இடையிலான மோதலை மும்பை இந்தியன்ஸ் அணி களத்திற்கு வெளியே கொண்டு வந்துள்ளது. சூர்யா குமார் யாதவை கோலி புறக்கணிப்பது போன்ற பிம்பத்தை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி உருவாக்கி உள்ளது. இதனால் இணையத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டிப்பாக விரைவில் பெங்களூர் அணியும் பதிலடி கொடுக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, October 30, 2020, 10:06 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+