For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தெறிக்கவிட்ட ரோஹித், சூர்யா.. ஏமாற்றிய கும்மின்ஸ், ரசல்.. கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை மாஸ் வெற்றி!

அபுதாபி: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் மும்பை இன்று மாஸ் ஆட்டம் ஆடியுள்ளது. இதில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது.

அதன்பின் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர் கொண்டது. இன்று நடந்த போட்டி மும்பை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.

வெற்றி முக்கியம்

வெற்றி முக்கியம்

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று நடக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி இருந்தது. மும்பையின் அணி சென்னையிடம் தோல்வி அடைந்த காரணத்தால் அடிப்பட்ட புலியாக இருந்தது.

கொல்கத்தா எப்படி

கொல்கத்தா எப்படி

இன்னொரு பக்கம் கொல்கத்தா அணி இயான் மோர்கன் வருகையால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.அதேபோல் ஆண்ட்ரு ரசலின் போட்டி இன்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இன்று கொல்கத்தா அணியில் சுனில் நரேன், இயான் மோர்கன், சுபமான் கில், நிதிஷ் ராணா, ஆண்ட்ரு ரசல், தினேஷ் கார்த்திக், நிகில் நாயக், பாட் கும்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியார், சிவம் மாவி ஆகியோர் விளையாடுகிறார்கள்.

மும்பை அணி

மும்பை அணி

மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீ காக், சூர்யா குமார் யாதவ், திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, பேட்டின்சன், ராகுல் சார், டிரெண்ட் போல்ட் , பும்ரா ஆகியோர் உள்ளனர். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து மும்பை அதிரடியாக ஆடியது. டிகாக் மட்டும் 1 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதன்பின் ரோஹித் சர்மாவும் கொல்கத்தா பவுலிங்கை புரட்டி எடுத்தார்.

வேலை செய்யவில்லை

வேலை செய்யவில்லை

54 பந்தில் 6 சிக்ஸ் 3 பவுண்டரி என்று 80 ரன்கள் எடுத்தார். பேட் கும்மின்ஸ், குல்தீப் யாதவ், ரசல் என்று எல்லோரின் ஓவரையும் ரோஹித் வெளுத்து காட்டினார். கொல்கத்தா போட்ட எந்த திட்டமும் மும்பைக்கு எதிராக வேலை செய்யவில்லை. முக்கியமாக பேட் கும்மின்ஸ் பவுலிங் சுத்தமாக வேலையை செய்யவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை 195 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு மும்பை 196 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

மிக மோசம்

மிக மோசம்

அதன்பின் ஆடிய கொல்கத்தா தொடக்கத்தில் இருந்து மோசமாக திணறியது. முதல் ஓவரில் ஒரு ரன் கூட செல்லவேயில்லை. அதன்பின் வெறும் 7 ரன்களில் சுப்மான் கில் அவுட்டானார். சுனில் நரேன் 9 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் வந்த தினேஷ், ராணா கொஞ்ச நேரம் ஆடினார்கள். ஆனால் இவர்களும் 30, 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

அதன்பின் இயான் மோர்கன், ஆண்ட்ரு ரசல் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களும் 16 மற்றும் 11 ரன்களுக்கு அவுட்டானார்கள். இதையடுத்து கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Story first published: Wednesday, September 23, 2020, 23:54 [IST]
Other articles published on Sep 23, 2020
English summary
IPL 2020: Mumbai Indians wins there match against KKR in Abu Dhabi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+