Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீக்கப்பட்ட "புவி".. தமிழக வீரர் நடராஜனுக்கு பெரிய பொறுப்பு கொடுத்த ஹைதராபாத் டீம்.. தனி ஒருவன்!

சார்ஜா: இன்று நடக்கும் மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக வீரர் நடராஜன் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு முக்கியமான அணிகளான மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. இரண்டு அணிகளும் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என்று ஒரே அளவு புள்ளிகளை பெற்றுள்ளது.

இதனால் இன்று நடக்கும் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக உள்ளது. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை டீம்

மும்பை டீம்

மும்பை அணியில் இன்று டி காக், ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷான், கைரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பேட்டின்சன், ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், பிரைஸ்டோ, மனிஷ்பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், டி நடராஜன் ஆகியோர் ஆடுகிறார்கள். இன்று அணியில் சந்தீப் சர்மா, சித்தார் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீக்கம் ஏன்

நீக்கம் ஏன்

கடந்த போட்டியில் சரியாக பவுலிங் செய்யாத ஹைதராபாத் அணியின் கலீல் இன்று நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் புவனேஷ்வர்குமார் இன்று அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

சார்ஜா மைதானமே

சார்ஜா மைதானமே

இதனால் இன்று புவி ஆடவில்லை. இதனால் தமிழக வீரர் நடராஜன் மீது பிரஷர் அதிகம் வைக்கப்பட்டுள்ளது. இவர்தான் இன்று அணியின் ஸ்பீட் பவுலிங்கை வழி நடத்தி செல்ல போகிறார். கலீல், புவி இருவரும் அணியில் இல்லாத நேரத்தில் இன்று ஆட்டம் நடக்கிறது. இதனால் நடராஜன் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது அவருக்கு மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கப்படுகிறது.

சந்தீப் சர்மா

சந்தீப் சர்மா

இன்னொரு பக்கம் ஹைதராபாத் வீரர் சந்தீப் சர்மா இன்று அணியில் ஆடுகிறார். இவர் ரோஹித் விக்கெட்டை ஏற்கனவே எடுத்துவிட்டாலும் பெரிய அளவில் இவர் மீது அணிக்கு நம்பிக்கை இல்லை. இதனால் இன்று நடராஜன்தான் டெத் ஓவர்களை வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

இந்த போட்டி நடக்கும் சார்ஜா மைதானம் பேட்டிங் செய்ய வசதியாக இருக்கும். அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் வரை நிலவி வருகிறது. இதனால் வீரர்கள் இன்று வெயிலுக்கு இடையே ஆடுவது மிகவும் கடினம் ஆகும். முக்கியமாக பீல்டிங் செய்வது மிகவும் கடினம் ஆகும்.

Story first published: Sunday, October 4, 2020, 16:22 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+