For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்பார்க் இல்லை.. தோனியால் பாண்டிங் எடுத்த முடிவு.. உள்ளே புகுந்த குரல் கொடுத்த சேவாக்.. பரபர சம்பவம்

துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனியை பார்த்து நேற்று டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் எடுத்த முடிவு ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக ஆடி உள்ளது. தொடர் தோல்விகளால் அணி நிர்வாகம் மிக மோசமாக துவண்டு போய் உள்ளது.

எனக்கு வலிக்கிறது என்று கேப்டன் தோனியே சொல்லும் அளவிற்கு மிக மோசமான ஆட்டத்தை சிஎஸ்கே அணி ஆடி உள்ளது. சிஎஸ்கே அணியில் எப்போதும் சிறப்பாக விளையாடும் மூத்த வீரர்கள் யாரும் இந்த முறை சரியாக ஆடவில்லை.

சரியாக ஆடவில்லை

சரியாக ஆடவில்லை

வாட்சன், டு பிளசிஸ், ராயுடு, ஜாதவ் என்று மூத்த வீரர்கள் யாருமே சிஎஸ்கே சார்பாக இந்த முறை சரியாக ஆடவில்லை. அதேபோல் தோனியும் இந்த முறை சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதை வெளிப்படையாக தோனியே ஒப்புக்கொண்டுள்ளார். மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வாய்ப்பு கொடுத்தோம், ஆனால் அவர்கள் சரியாக ஆடவில்லை என்று கூறினார்.

பதில் அளித்தார்

பதில் அளித்தார்

இதையடுத்து இளைஞர்களுக்கு ஏன் தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கேள்விகள் எழுந்தது. இதற்கு பதில் அளித்த தோனி, இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றார். தோனி சொன்னது போலவே கடந்த போட்டியில் ஆடிய இளம் வீரர்கள் ஜெகதீசன், ரூத்துராஜ் இருவரும் எந்த ஸ்பார்க்கையும் வெளிப்படுத்தாமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் நேற்று பாண்டிங்கும் இதேபோல் தோனியை பின்பற்றி முக்கிய முடிவை எடுத்தார். அணியில் கடந்த சில போட்டிகளாக சரியாக ஆடாத இளம் வீரர் பிரித்வி ஷாவை அணியில் இருந்து நீக்கினார். கடந்த 4 போட்டிகளாக பிரித்வி ஷா சரியாக ஆடவில்லை. ஓப்பனராக இறங்கும் இவர், சரியான வாய்ப்பு கிடைத்தும் நன்றாக ஆடவில்லை.

பாண்டிங் நீக்கினார்

பாண்டிங் நீக்கினார்

இதன் காரணமாக பாண்டிங் பிரித்வி ஷாவை நீக்கினார். எப்போதும் இளைஞர்களை நம்பும் பாண்டிங்கே பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு மூத்த வீரர் ராஹானேவை அணியில் எடுத்தார்.ஸ்பார்க் இல்லை என்று பிரித்வி ஷாவை உட்கார வைத்தார் பாண்டிங். பாண்டிங்கின் இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. பிரித்வி ஷாவிற்கு கூடுதல் வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.

வாய்ப்பு வழங்க வேண்டும்

வாய்ப்பு வழங்க வேண்டும்

பிரித்வி ஷா இளைஞர். அவருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கி தவறுகளை திருத்த இடம் அளித்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி தோனி போல உட்கார வைக்க கூடாது என்று பலரும் இணையத்தில் பாண்டிங்கையும், கூடவே சேர்த்து தோனியையும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில் சேவாக் இவர்களுக்கு தற்போது ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.

ஆதரவு

ஆதரவு

அதில், பாண்டிங் செய்தது தவறு இல்லை. ஒரு வீரர் தொடர்ச்சியாக ஆடவில்லை என்றால் அவரை உட்கார வைக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு கொஞ்சம் பிரேக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள். பாண்டிங் எடுத்தது சரியான முடிவுதான்.

சரியான முடிவு

சரியான முடிவு

தோனியும் கூட இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் அந்த இரண்டு இளைஞர்கள் தோனியின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை. தோனி சரியாக செயல்பட்டார். கண்டிப்பாக அவர் வருத்தத்தில் இருப்பார். தோனியை அந்த இளைஞர்கள் கைவிட்டு விட்டனர், என்று சேவாக் கருத்து கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 25, 2020, 13:15 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
IPL 2020: Ponting followed Dhoni on not giving Chances to youths without spark.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+