Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதுகெலும்போடு செயல்படுங்கள்.. கோலியை மீறி சாஸ்திரி செய்த டிவிட்.. ஒரே ஒரு வீரரால் உருவான பரபரப்பு!

துபாய்: இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல்முறையாக கோலியின் முடிவிற்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார்.

பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடிய விதம் நாடு முழுக்க வைரலாகி உள்ளது. நேற்று 43 பந்துகள் அடித்த சூர்ய குமார் யாதவ் மொத்தம் 79 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.

இவரின் ஆட்டம் காரணமாக நேற்று பெங்களூரை எளிதாக வீழ்த்தி மும்பை வென்றது. இதன் காரணமாக தற்போது இந்திய அணிக்குள் சூர்ய குமார் யாதவை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

எப்போது

எப்போது

இப்போது திடீர் என்று இந்த கோரிக்கைகள் வைக்கப்படவில்லை. கடந்த 3 வருடமாகவே சூர்ய குமார் யாதவை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடங்கி டொமஸ்டிக் கிரிக்கெட் வரை அனைத்திலும் சூர்ய குமார் யாதவ் நன்றாக ஆடி வருகிறார். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்திய அணியின் கேப்டன் கோலியும், தேர்வுக்குழுவும் இவரை தொடர்ந்து புறக்கணிப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. சூர்ய குமார் யாதவ் ரோஹித் சர்மாவிற்கு நெருக்கமானவர். இதன் காரணமாக கோலி வேண்டும் என்றே சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கிறார். கோலி அரசியல் செய்கிறார் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை

இந்த முறை

அதேபோல் இந்த முறையும் ஆஸ்திரேலிய தொடரில் சூர்ய குமார் யாதவிற்கு கோலி வாய்ப்பு வழங்கவில்லை. பெங்களூர் அணியில் இருக்கும் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சூர்ய குமார் யாதவிற்கு கோலி வாய்ப்பு வழங்கவில்லை. இது கோலியின் முடிவு, கோலிதான் வேண்டும் என்றே சூர்ய குமார் யாதவை புறக்கணித்தார். நேற்று களத்திலும் கோலி இதனால்தான் ஆக்ரோஷமாக செயல்பட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

என்ன

என்ன

கோலி இப்படி செயல்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல்முறையாக கோலியின் முடிவிற்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். நேற்று சூர்ய குமார் யாதவின் ஆட்டத்தை பார்த்த ரவி சாஸ்திரி... சூர்ய வணக்கம். வலிமையாக இருக்கவும்.. பொறுமையாக இருக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய அணியில் சேரும் வரை பொறுமையாக இருக்கவும் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

பொறுமை

பொறுமை

சூர்ய குமார் யாதவை இந்திய அணியில் சேர்க்க கோலி விரும்பாத நிலையில் ரவி சாஸ்திரி முதல் முறையாக இப்படி கோலியின் முடிவிற்கு எதிராக சூசகமாக பேசியுள்ளார். இதை கமெண்டில் பலரும் பாராட்டி உள்ளனர். அணி தேர்வில் பாகுபாடு காட்ட கூடாது. ரவி சாஸ்திரி கோலிக்கு பயப்படாமல் இருக்க வேண்டும். கொஞ்சமாவது சாஸ்திரி முதுகெலும்போடு செயல்பட வேண்டும் என்று பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.. இதனால் இந்திய அணியின் தேர்வில் பெரிய குழப்பமே ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 29, 2020, 10:33 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+