Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னுடைய கெரியரே காலியாகிவிட்டது.. அவசரப்பட வேண்டாம்.. ரோஹித்துக்கு சாஸ்திரி வைத்த செக்.. பின்னணி!

துபாய்: காயம் இருக்கும் போது அவசரப்பட்டு மைதானத்திற்கு வர வேண்டாம் என்று ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகவில்லை. ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் மாதம் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

இந்த தொடரில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெறவில்லை.

காயம்

காயம்

ரோஹித் சர்மா அணியில் புறக்கணிக்கப்பட்டதற்கு காயம்தான் காரணமா என்று கேள்விகள், சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்திய அணி அறிவிப்பிற்கு பின் ரோஹித் சர்மா வலை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் கூட வைரலானது. இந்த நிலையில் ரோஹித் சர்மா அவசர அவசரமாக மைதானத்திற்கு திரும்ப நினைக்கிறார், அது தவறு என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

பேச்சு

பேச்சு

ரவி சாஸ்திரி தனது பேச்சில், ஒரு வீரருக்கு காயத்தின் போது ஏற்படும் உணர்வை விட மோசமாக ஒரு உணர்வு இருந்து விட முடியாது. அறையில் முடங்கி இருப்பதை சில வீரர்கள் விரும்புவது இல்லை. அறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று பலருக்கு தோன்றும்.

மைதானம்

மைதானம்

உடனே மைதானத்திற்கு செல்ல வேண்டும். உடனே பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று பலருக்கு தோன்றும். பல வீரர்கள் தங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்க விரும்புவார்கள். உங்கள் உடல் சரியாக இருக்கிறதா என்று உங்களுக்குத்தான் தெரியும்.

வெளியே சென்றால்

வெளியே சென்றால்

வெளியே சென்று மைதானத்தில் மீண்டும் ஆட நம்மால் முடியுமா, முடியாதா என்பது உங்களுக்கு மனசிற்குதான் தெரியும். ரோஹித் சர்மா உடனே தனது உடலை சோதனை செய்ய விரும்பி இருக்கலாம். அதனால் அவர் மைதானத்திற்கு வந்து பயிற்சி மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் இதில் அவசரப்பட கூடாது.

அவசரம் வேண்டாம்

அவசரம் வேண்டாம்

பொறுமையாக இருங்கள். நான் ஒரு கிரிக்கெட் வீரராக இதே சூழ்நிலையை அனுபவித்து இருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை 1991ல் முடிந்தது. நான் ஆஸ்திரேலிய தொடரில் கடைசியாக ஆடி இருக்க கூடாது, ஆனால் அன்று ஆடினேன். அப்போது காயத்தோடு ஆடினேன்.. அதனால்தான் அதன்பின் என்னால் கிரிக்கெட் தொடர்களில் ஆடவே முடியவில்லை.

3 மாதம்

3 மாதம்

3-4 மாதங்கள் அப்போது முறையாக ஓய்வு எடுத்து இருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்குக்கும். கூடுதலாக 4-5 வருடங்கள் நான் ஆடி இருப்பேன். காயத்தை நான் மதிக்கவில்லை. மருத்துவர்கள் பேச்சை நான் மதிக்கவில்லை. அதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தது.. அதே விஷயம் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று ரவி சாஸ்திரி ரோஹித் சர்மாவிற்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

Story first published: Sunday, November 1, 2020, 8:31 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+