Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரச்சனை என்றதும்.. ஓரமாக ஒதுங்கிய ரவி சாஸ்திரி.. விடாமல் துரத்தும் ரோஹித்.. அணிக்குள் என்ன நடந்தது?

துபாய்: ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் இந்திய அணியை தேர்வு செய்ததில் தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையில் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

ஐபிஎல்லிற்கு பிறகு நடக்க உள்ள இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம்

கடந்த வாரம்

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் தேர்வாகி உள்ளனர். முக்கியமாக ஐபிஎல் தொடரில் இந்த முறை வீரர்கள் ஆடிய விதத்தை வைத்து பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி, நடராஜன், சைனி உள்ளிட்ட பலர் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு பெற்றது ஐபிஎல் மூலம்தான்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணியில் இந்த முறை மும்பை வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வீரர்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அணியில் இருந்து ரோஹித் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

ஆனால் காலில் காயம் இருந்தாலும் கூட ரோஹித் சர்மா தொடர்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மும்பை அணிக்காக தொடர்ந்து இவர் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு காலில் காயம் என்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது வலை பயிற்சியில் இவர் கலந்து கொண்டு இருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இவரால் வலை பயிற்சி மேற்கொள்ள முடியும் போது ஏன் அணியில் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கோலியும், சாஸ்திரியும் சேர்ந்து ரோஹித்தை புறக்கணித்துவிட்டார்கள் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயிற்சியாளர் சாஸ்திரி அளித்த பேட்டியில், நான் தேர்வுக்குழுவில் இடம்பெறவில்லை. எனக்கும் அணி தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

இந்திய அணி தேர்வில் நான் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் ரோஹித் சர்மா அணியில் எடுக்கப்படாமல் போக காயம்தான் காரணம். அவரின் காயம் குறித்து அளிக்கப்பட்ட ரிப்போர்தான் காரணம் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

விலகினார்

விலகினார்

ரோஹித் சர்மா நீக்கம் சர்ச்சையானதை தொடர்ந்து ரவி சாஸ்திரி நைசாக சர்ச்சைகளில் இருந்து விலகி உள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவோ தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாருங்கள் என்னால் களத்தில் பேட்டிங் செய்ய முடிகிறது என்பதை உணர்த்தும் வகையில் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Story first published: Monday, November 2, 2020, 15:04 [IST]
Other articles published on Nov 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+