அணிக்குள் வந்தாலும்.. பெரிய அளவில் மதிப்பு இருக்காது.. பிசிசிஐ பிளான்.. ரோஹித் சர்மா என்ன செய்வார்?
துபாய்: இந்திய அணியின் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட.. அவருக்கு கேப்டனாக வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர் ஆட உள்ள இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. முக்கியமான பல வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இளம் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் காயத்தால் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒருநாள் அணிக்குள் புதிதாக சஞ்சு சாம்சன், டி 20 அணியில் நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

என்ன நடந்தது
இந்த நிலையில் இந்திய அணியில் மீண்டும் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக முதலில் இவர் அணியில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இவர் மீண்டும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணி
ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இவருக்கு காயத்தால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் டெஸ்ட் அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே கோலி ஆடுவார். ஒரு போட்டிக்கு பின் கோலி வெளியேற உள்ளார். இவருக்கும் -அனுஷ்கா சர்மாவிற்கும் குழந்தை பிறக்க உள்ளதால்.. கோலி பாதியில் வெளியேற உள்ளார்.

கேப்டன்
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் கோலி இல்லாத நேரத்தில் ரோஹித் சர்மா இடம்பெற்றாலும் கூட.. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது என்கிறார்கள். காயத்தை காரணம் காட்டி அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது என்கிறார்கள். ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பெற்றாலும் பெரும்பாலும் ரஹானேதான் துணை கேப்டனாக இருப்பார்.

துணை கேப்டன்
அதனால் இந்த முறை கோலி இல்லாத போது ரஹானேதான் கேப்டனாக இருப்பார், ரோஹித் துணை கேப்டனாக இருப்பார் என்று கூறுகிறார்கள். இவரின் காயத்தை காரணம் காட்டி கேப்டன் பதவி மறுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். டெஸ்ட் கேப்டன் பதவி மறுக்கப்பட்டால் அதற்கு ரோஹித் சர்மா எப்படி எதிர்வினையாற்றுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications