Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்றுதான் கிளைமேக்ஸ்.. ரோஹித் சர்மா இனி என்ன செய்வார்?.. விரைந்தது பிசிசிஐ குழு.. முழு பின்னணி!

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல்நிலையை இன்று பிசிசிஐ மருத்துவக்குழு சோதனை செய்ய உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆட உள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் இந்த தொடருக்கான இந்திய அணி சில நாட்கள் முன் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இல்லை இடம்பெறவில்லை.

காயம்

காயம்

இவருக்கு கீழ் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால் கேப்டன் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. கோலிதான் அரசியல் செய்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

விமர்சனம்

விமர்சனம்

அதே சமயம் ரோஹித் சர்மாவின் காயம் மிகவும் மோசமாக இருக்கிறது. அவரின் காயம இப்போதைக்கு சரியாக வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள்.இவருக்கு தொடையின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இது எப்படியும் குணமாக 4 வாரங்கள் ஆகும் என்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ரோஹித் சர்மா இந்திய அணியில் எடுக்கப்படாமல் போனதற்கு முழுக்க முழுக்க காயம் மட்டுமே காரணம் ஆகும். இவர் நல்ல ஓய்வு எடுத்தால் மட்டுமே மீண்டும் முழு பார்மிற்கு திரும்ப முடியும். ஆனால் வேண்டும் என்றே.. இவர் மும்பை அணி விளையாடும் போட்டிகளின் போது மைதானத்திற்கு செல்கிறார்.

மும்பை அணி

மும்பை அணி

மும்பை அணியோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறார். இவரின் இந்த செயல்.. காலில் இருக்கும் காயத்தை இன்னும் மோசமாக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இவர் பிட்னஸ் இதனால் பாதிக்கப்படலாம். இவர் தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இன்று ரோஹித் சர்மாவின் உடல்நிலையை பிசிசிஐ சோதனை செய்ய உள்ளது.

சோதனை

சோதனை

இன்று அவரின் உடல்நிலையை சோதனை செய்து முக்கிய முடிவை எடுக்க உள்ளனர். ஐபிஎல் தொடரில் ரோஹித் மேலும் நீடிக்கலாமா என்பது குறித்து இன்று முடிவு செய்ய உள்ளனர். அவர் காயத்துடன் தொடர்ந்து களத்திற்கு வருவது ஆபத்து என்பதால்.. இன்றே அவருக்கு சோதனை செய்து முக்கிய முடிவை எடுக்க பிசிசிஐ மருத்துவ குழு முடிவு செய்துள்ளது.

Story first published: Sunday, November 1, 2020, 12:47 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+