For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரைத்தான் அனுப்ப போகிறோம்.. ஒருநாளுக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த ரோஹித் சர்மா.. ப்பா எவ்வளவு தில்

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கியமான வீரரான ராகுல் சாகர் இன்று அணியில் இடம்பெறவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா இன்று அணியில் செய்த மாற்றம் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் இறங்கி உள்ளது.

பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று இறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து மோசமாக சொதப்பி வருகிறது.

மோசம்

மோசம்

இதில் முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். அதன்பின் ரஹானேவும் 2 ரன்களில் அவுட் ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தவானும் சரியாக ஆடவில்லை. தவானும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பும்ரா, போல்ட் இருவரும் பவர் பிளேவில் போட்ட பந்துகளை தொட கூட முடியாமல், டெல்லி வீரர்கள் திணறினார்கள்.

திணறல்

திணறல்

முதல் பவர் பிளேவிலேயே வரிசையாக போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். முதல் பவர்பிளே ஸ்பீட் பவுலிங்கிற்குதான் சாதகமாக இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா துணிச்சலாக ஸ்பின் பவுலரை களமிறங்கினார். ஜெயந்த் யாதவை பவுலிங் செய்ய சொன்னார்.

4வது ஓவர்

4வது ஓவர்

4வது ஓவரை பும்ரா வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. துணிச்சலாக ஜெயந்த் யாதவிற்கு ரோஹித் ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் ஜெயந்த் யாதவ் திட்டமிட்டபடி தவான் விக்கெட்டை எடுத்தார். தவான் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் எடுக்க போகிறார் என்று பலரும் கணித்த நிலையில்.. கணிப்பு தவறாமல் துல்லியமாக தவான் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் எடுத்தார்.

சொன்னார்

சொன்னார்

ஜெயந்த் யாதவை ரோஹித் சர்மா மும்பை அணிக்குள் சர்ப்ரைஸாக கொண்டு வரவில்லை.. நேற்றே ரோஹித் சர்மா இது குறித்து ஹிண்ட் கொடுத்து இருந்தார். ராகுல் சாஹருக்கு பதிலாக ஜெயந்த் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். நேற்று பேட்டி அளித்த ரோஹித் சர்மா.. டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் நிறைய லெப்ட் ஹேண்ட் வீரர்கள் உள்ளனர். அதனால் ஜெயந்த் யாதவ் நல்ல ஆப்ஷன்.

ஜெயந்த் யாதவ்

ஜெயந்த் யாதவ்

லீக் போட்டியில் டெல்லிக்கு எதிராக ஜெயந்த் யாதவ் நன்றாக பந்து வீசினார். அவர்களின் மிடில் ஆர்டரை குறி வைக்க ஜெயந்த் யாதவ் உதவியாக இருப்பார். இதற்கு முன் ஜெயந்த் யாதவ் டெல்லி அணியில் விளையாடி உள்ளார் என்பதால், எங்களுக்கு ஜெயந்த் யாதவ் உதவியாக இருப்பார் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருந்தார்.

சொல்லிவிட்டு செய்தார்

சொல்லிவிட்டு செய்தார்

ஜெயந்த் யாதவை களமிறக்க போகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் ரோஹித் சர்மா இறக்கினார். அதிலும் டெல்லி அணியின் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களை குறி வைக்க போகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டுதான் ரோஹித் சர்மா இன்று களமிறங்கினார்.. அவரின் தில்லான முடிவு மும்பை அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

Story first published: Tuesday, November 10, 2020, 20:37 [IST]
Other articles published on Nov 10, 2020
English summary
IPL 2020: Rohit Sharma did a smart move by bringing Jayant Yadav against Delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X