Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு முடிவோடத்தான் இருக்காரு ரோகித்... அவர் அடித்த சிக்ஸ் ஓடும் பேருந்தையே ஒருகை பாத்துடுச்சு

அபுதாபி : வரும் 19ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதவுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்நிலையில் 4 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

IPL 2020: Rohit Sharma Hits A Moving Bus As He Clears Stadium With Huge Six

இதனிடையே, நேற்றைய இரவுநேர பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா அடித்த பந்து மைதானத்தை தாண்டி ஓடும் பேருந்தின் மேல்தளத்தை பதம் பார்த்தது.

ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், முதல் போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதவுள்ளது நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணி, இதையடுத்து இரவு பகலாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

IPL 2020: Rohit Sharma Hits A Moving Bus As He Clears Stadium With Huge Six

இந்நிலையில் நேற்றிரவு அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்திற்கு வெளியே ஓடிய பேருந்தின் மேற்கூரையை பதம் பார்த்தது. இந்த சிக்ஸ் 95 மீட்டர் தொலைவில் பேருந்தை தாக்கியது. 4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறையும் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருவதற்கான சான்றே இந்த ஷாட்.

Recommended Video

ஐ.பி.எல் 2020ல் அதிக சம்பளம் வாங்கும் 10 வீரர்கள் !

இதையடுத்து இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Story first published: Wednesday, September 9, 2020, 18:16 [IST]
Other articles published on Sep 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+