Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போ மட்டும் ஏன்?.. ரோஹித் சர்மாவிற்கு பறந்த மெசேஜ்.. கோலியின் முடிவால்.. எதிர்பார்க்காத திருப்பம்!

துபாய்: ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா எப்போது வேண்டுமானாலும் இணைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. வருட இறுதியில் நடக்க உள்ள மிகப்பெரிய தொடராக இந்த தொடர் அமைய உள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய வீரர்கள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டனர். இதில் மூத்த வீரர் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

காயம்

காயம்

காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவரின் கீழ் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணியில் இவர் எடுக்கப்படவில்லை. ஆனால் மும்பை அணியின் கடைசி போட்டியில் இறங்கிய இவர்.. தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபித்தார்.

நிரூபித்தார்

நிரூபித்தார்

எனக்கு காயம் பெரிதாக இல்லை. நான் முழு பிட்னசுடன் இருக்கிறேன் என்பதை பிசிசிஐ அமைப்பிற்கு நிரூபிக்கவே ரோஹித் சர்மா களத்திற்கு வந்தார். பிசிசிஐ அமைப்பிற்கு ரோஹித் அனுப்பிய மெசேஜ் போல இதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இதனால் ரோஹித் சர்மா பிட்னஸ் குறித்து ஆலோசனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கோலி

கோலி

அவரை இந்திய அணியில் எடுப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறாத நிலையில்.. தற்போது கோலியும் சில போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கும் அனுஸ்கா சர்மாவிற்கும் அடுத்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது. இதனால் கோலி டெஸ்ட் தொடரின் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது. இந்த தொடருக்கு ராகுலை கேப்டனாக நியமிக்க முடியாது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக ராகுலை கேப்டனாக அனுப்ப முடியாது. இதனால் ரோஹித் சர்மாவை அழைக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதாவது ரோஹித்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதை கங்குலியும் கூட சூசகமாக தெரிவித்து இருந்தார்.

.

கங்குலி என்ன சொன்னார்

கங்குலி என்ன சொன்னார்

சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த கங்குலி.. ரோஹித் பிட்டாக இருந்தால் கண்டிப்பாக அணியில் எடுப்போம் , அதில் சந்தேகம் இல்லை என்றார். இது ரோஹித்திற்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான மெசேஜ் என்கிறார்கள். அதாவது நீங்கள் பிட்டாக இருந்தால்..மீண்டும் உள்ளே வரலாம் என்று கங்குலி நேரடியாக தெரிவித்துள்ளார் . தற்போது ஐபிஎல்லில் ஆடி ரோஹித்தும் தனது பிட்னஸை நிரூபித்துவிட்டார்

செல்வார்

செல்வார்

இதனால் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா எப்போது வேண்டுமானாலும் இணைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அப்போது உங்களுக்கு ரோஹித் முக்கியம் இல்லை இப்போ மட்டும் கோலி இல்லை என்றதும் ஏன் ரோஹித்தை அணியில் எடுக்கிறீர்கள் என்று ரோஹித்தின் தீவிர பேன்ஸ் கேள்வி எழுப்பி உள்ளனர்.சில நாட்களுக்கு முன் ரோஹித்தை கோலி புறக்கணிக்கிறார் என்று செய்திகள் வந்த நிலையில்.. தற்போது கோலியின் இடத்தையே ரோஹித் நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, November 8, 2020, 9:43 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+