இப்படி ரிஸ்க் எடுப்பது தவறு.. ரவி சாஸ்திரி பேச்சை மீறிய ரோஹித்.. கண்காணிக்கும் பிசிசிஐ.. பின்னணி
துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து வலை பயிற்சி மேற்கொள்வது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மருத்துவ குழுவின் அறிவுரையின் படி இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
இந்த நிலையில் இவரை சோதித்த மருத்துவ குழு.. ரோஹித் சர்மா இன்னும் சில நாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆட கூடாது. ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளனர். அவர் மீண்டும் களத்திற்கு வந்தால்.. காயம் பெரிதாக வாய்ப்புள்ளது, அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

சாஸ்திரி
அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ரோஹித் சர்மாவை ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கி உள்ளார். ரோஹித் சர்மா அவசரமாக களத்திற்கு திரும்ப வேண்டும் என்று நினைக்க கூடாது. நான் காயத்தோடு ஆடியதால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டது.

என்னை போன்ற நிலை
என்னை போன்ற நிலைமை உங்களுக்கும் ஏற்பட கூடாது. அதனால் தேவையான அளவு ஓய்வு எடுங்கள் என்று ரோஹித் சர்மாவிற்கு சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார். ஆனால் ரோஹித் சர்மா இந்த அறிவுரை எதையும் கேட்காமல் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதிலும் நேற்று நீண்ட நேரம் ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டார்.

நீண்ட நேரம்
ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா இப்படி பயிற்சி மேற்கொள்கிறார். ஆனால் இது அவருக்கே சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிதாகவும் வாய்ப்புள்ளது.

கண்காணிப்பு
இதனால் அவரின் உடல்நிலையை பிசிசிஐ கண்காணிக்க துவங்கி உள்ளது. மும்பை அணியின் பிஸியோவும் ரோஹித் சர்மாவை கண்காணித்து வருகிறார்கள். விரைவில் இவரின் உடல்நிலை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications