Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிதமை பிரேக் செய்த ஹிட்மேன்.. சொல்லி சொல்லி அடித்த ரோஹித் சர்மா.. "அவருக்கு" அனுப்பிய மெசேஜ்!

துபாய்: டெல்லி அணிக்கு எதிராக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று மாஸ் ஆட்டம் ஆடியுள்ளார்.

டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கிறது. மும்பை அணி இதில் இப்போதே வெற்றியை நெருங்கிவிட்டது.. டெல்லியை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு மும்பை அணிக்கு கை கூடி வந்துள்ளது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டிற்கு 156 ரன்கள் எடுத்தது. 157 என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது.

எப்படி

எப்படி

தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா சிக்ஸ் அடித்து ஆட்டத்தை வேகமாக தொடங்கினார். இன்னொரு பக்கம் டி காக் விக்கெட் போனாலும் பரவாயில்லை என்று அதிரடி காட்டினார். வெறும் 12 ரன்களே பிடித்த டி காக் எளிதாக 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதிரடி

அதிரடி

அதன்பின் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா.. டெல்லி பவுலர்களை வெளுத்து வாங்கினார். கொஞ்சம் இடம் கொடுத்தால் கூட பவுலர்கள் செட்டாகி விடுவார்கள்.. அதை அனுமதிக்க கூடாது என்று ரோஹித் சர்மா எல்லா பவுலரின் ஓவரிலும் அடித்து துவம்சம் செய்தார். முக்கியமாக அஸ்வின், ரபாடா, ஆன்ரிச் ஓவரில் அதிரடியாக ஆடினார்.

அரைசதம்

அரைசதம்

டெல்லி பவுலர்கள் யாரையும் செட்டாக விடாமல்.. பவுண்டரி, சிக்ஸ் என்று அடித்து அவர்களின் ரிதமை பிரேக் செய்தார். ஒரு பவுலர் விக்கெட் எடுக்க தொடங்கினாலும் ஆபத்து.. சிறிய இலக்கு தானே என்று அலட்சியமாக இருக்க கூடாது என்பதில் ரோஹித் கவனமாக இருந்தார். இதனால் டெல்லி பவுலர்கள் பயந்து பயந்து பவுலிங் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தொடரில் பெரிய அளவில் ரோஹித் சர்மா அடிக்கவில்லை. காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடவில்லை.

கேப்டன்

கேப்டன்

இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஒரு கேப்டனாக முன்னே நின்று அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றுள்ளார். முக்கியமான நாளில் அரை சதம் அடித்து தனது பார்மை நிரூபித்துள்ளார். இவரின் காயத்தை காரணம் காட்டி.. இந்திய அணியின் தேர்வுக்குழு இவரை இந்திய அணியில் எடுக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆஸ்திரேலியா செல்லும் இந்தியாவின் ஒருநாள், டி 20 அணியில் இப்போதும் ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பாருங்கள்.. நான் டி 20 போட்டியில் நன்றாக ஆடுகிறேன் என்று ரோஹித் நிரூபித்துள்ளார்.

பார்ம்

பார்ம்

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷியிடம் தனது பார்மை நிரூபிக்கும் வகையில் ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் பொளந்து கட்டி இருக்கிறார்.. இவரை இந்திய டி20 அணியில் எடுக்காதது தவறுதானோ என்று கேள்வி எழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, November 10, 2020, 22:33 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+