Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த நேரத்தில் இப்படி ஒரு அவமானம் தேவையா.. வலையில் விழுந்த ரோஹித்.. செக் வைக்குமா பிசிசிஐ?

துபாய் : ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யாததால் சிக்கலில் உள்ளது பிசிசிஐ.

அதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என பிசிசிஐ கணக்கு போட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா தானாகவே வந்து வலையில் சிக்கி உள்ளார்.

தனக்கு காயமில்லை என நிரூபிக்க அவர் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மற்றும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடினார்.

சொதப்பல்

சொதப்பல்

ஆனால், அதுவே அவருக்கு வினையாக முடிந்துள்ளது. ஆம், அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் மோசமான ஆட்டத்தை ஆடி உள்ளார். கடைசி லீக் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், பிளே-ஆஃப் சுற்றில் டக் அவுட் ஆனார். இது பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது.

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பல போட்டிகளில் ஆடவில்லை. அவர் ஓய்வில் இருந்தார். பிளே-ஆஃப் சுற்றுக்குள் அவர் அணிக்கு திரும்பி விடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்து இருந்தது.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

ஆனால், இதன் இடையே அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

கேள்வி

கேள்வி

இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அளித்தது. முன்னாள் வீரர்கள் பலர் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்தும்,. அவரை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டனர்.

ரோஹித் எடுத்த முடிவு

ரோஹித் எடுத்த முடிவு

இந்த நிலையில், தனக்கு காயம் இல்லை என நிரூபிக்க ரோஹித் சர்மா முடிவு செய்தார். பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், அடுத்து ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் பங்கேற்றார். அது பிசிசிஐக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது.

பிசிசிஐ அமைதி

பிசிசிஐ அமைதி

உடற்தகுதியுடன் இருக்கும் வீரரை அணியில் தேர்வு செய்யாதது ஏன்? அவருக்கு போட்டிகளில் ஆட முடியாத அளவுக்கு காயம் உள்ளது என கூறியது ஏன்? என பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தது பிசிசிஐ.

டக் அவுட்

டக் அவுட்

ரோஹித் சர்மா அடுத்ததாக ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார்.

மோசமான சாதனை

மோசமான சாதனை

அந்த டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி உள்ளார். ஹர்பஜன் சிங், பார்த்திவ் பட்டேல், அஜின்க்யா ரஹானே ஆகியோருடன் 13 டக் அவுட்கள் ஆகி ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

மோசமான பார்ம்

மோசமான பார்ம்

அந்த அளவுக்கு மோசமான பார்மில் இருப்பதாக அவரே காட்டிக் கொண்டுள்ளது தான் இப்போது அவருக்கு சிக்கலாக மாறி உள்ளது. என்ன காரணம் சொல்லி ரோஹித் சர்மாவை நீக்கியதை நியாயப்படுத்தலாம் என காத்திருக்கும் பிசிசிஐ-க்கு ரோஹித் சர்மா தான் மோசமான பார்மில் இருப்பதாக காட்டியுள்ளார்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

ரோஹித் சர்மாவை ஐபிஎல் பார்மை காட்டி தேர்வு செய்யாமல் இருக்க முடியாது. ஆனாலும், பிசிசிஐ இதை ஒரு சாக்காக வைத்து அவரது உடற்தகுதியை, பேட்டிங்கை பரிசோதிக்க வேண்டும் என காலம் தாழ்த்தக் கூடும். ஐபிஎல் இறுதிப் போட்டியில் மட்டுமே ரோஹித் சர்மா ஆட உள்ளார். அதில் அவர் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தால் பிசிசிஐ-யால் எந்த காரணமும் கூற முடியாது. அவரை அணியில் தேர்வு செய்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 6, 2020, 17:26 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+