Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்திலேயே அதிர்ச்சி அடைந்த ரோஹித்.. அமைதியாக சிஎஸ்கே கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒரே போட்டியில் பல டிவிஸ்ட்

சென்னை: மும்பை அணியின் மிக முக்கியமான வீரர்கள் இன்று சென்னை அணிக்கு எதிராக சரியாக ஆடவில்லை. சென்னை அணியை குறைவாக மதிப்பிட்டு மும்பை வீரர்கள் களமிறங்கிய நிலையில், மும்பை அணியின் பேட்டிங் மிக மோசமாக சொதப்பி உள்ளது.

சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அபுதாபியில் மாலைக்கு மேல் போக போக பனி அதிகம் ஆகும். இதனால் கடைசி நேரத்தில் பவுலிங் செய்வது கஷ்டமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு முதலில் பவுலிங் செய்ய சென்னை அணி திட்டமிட்டது.

குறைவாக மதிப்பிட்டது

குறைவாக மதிப்பிட்டது

இந்த போட்டி தொடங்கும் முன் சென்னை அணியை எல்லோரும் மிக குறைவாக மதிப்பிட்டனர். சென்னையில் ரெய்னா, ஹர்பஜன் இல்லை. இதனால் சென்னை அணி மோசமாக சொதப்ப போகிறது. சென்னை அணியில் யாரும் பார்மில் இல்லை. ஆனால் மும்பை மிகவும் வலிமையாக இருக்கிறது. இதனால் சென்னை கண்டிப்பாக தோல்வி அடையும் என்று பலரும் கணித்து இருந்தனர்.

மும்பை டீம்

மும்பை டீம்

அதேபோல் மும்பை அணியும் கூட சென்னையை குறைவாகவே மதிப்பிட்டு இருந்தனர். சென்னையை எளிதாக வென்று விடலாம் என்று நினைத்தனர். அதேபோல் கடந்த 5 போட்டிகளில் மும்பையிடம் வரிசையாக சென்னை சொதப்பியதும் இதற்கு காரணம். ஆனால் போட்டி தொடங்கியதில் இருந்தே சென்னை அணிதான் மும்பைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது.

டிவிஸ்ட் 1

டிவிஸ்ட் 1

இந்த போட்டியில் முதல் டிவிஸ்ட் என்றால், சென்னை அணி நான்கு ஸ்பின் பவுலர்களை பயன்படுத்தியது. வரிசையாக ஜடேஜா, சாம் கரன், சாவ்லா, ஜாதவ் என்று அணியில் நான்கு ஸ்பின் பவுலர்கள் இருந்தனர். அதிலும் சென்னை அணி இரண்டாவது ஓவரிலேயே ஸ்பின் பவுலரை களமிறங்கியது பெரிய டிவிஸ்ட்டாக இருந்தது. இதை களத்தில் ஸ்பீட் பவுலரை எதிர்பார்த்து இருந்த ரோஹித் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

டிவிஸ்ட் 2

டிவிஸ்ட் 2

அதேபோல் சென்னை அணி இம்ரான் தாஹீருக்கு பதில் சில நாட்களுக்கு முன் அபுதாபி வந்த சாம் கரணை அணியில் எடுத்தது. வேகமாக கொரோனா டெஸ்ட் செய்து உடனே அணியில் எடுத்தது. ஸ்பின் பிட்ச் என்பதால் பிராவோவை தோனி உட்கார வைத்தார். பிராவோ அணியில் விளையாட மாட்டார் என்பதை மும்பை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

சாவ்லா பவுலிங்

சாவ்லா பவுலிங்

மும்பை அணி முழுக்க முழுக்க ஜடேஜா பவுலிங்கை எதிர்பார்த்து பயந்து கொண்டு இருந்த போது,ஆனால் ஜடேஜாவிற்கு பதில் சாவ்லாவை வைத்து தோனி சர்ப்ரைஸ் கொடுத்தார். சாவ்லா இப்படி சிறப்பாக பவுலிங் போடுவார் என்று மும்பை அணி கொஞ்சம் கூட நினைக்கவில்லை. மூன்று ஸ்பின் பவுலர்களும் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடினார்கள். இதனால் வரிசையாக மும்பை அணி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது.

விக்கெட் இழப்பு

விக்கெட் இழப்பு

அதன்பின் பாண்டிய , சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் பூச்சாண்டி காட்டினார்கள். ஆனால் அங்குதான் தோனி அடுத்த டிவிஸ்டை நிகழ்த்தினார். ஜடேஜா பவுலிங்கை பாண்டியா அடிக்கிறார் என்று தோனி பவுலிங்கை மாற்றவில்லை. பாண்டியா பேட்டை சுற்றுவதை கணித்து தொடர்ந்து ஜடேஜாவிற்கு ஓவர் கொடுத்தார். சரியாக சிக்ஸ் லைன் அருகே டு பிளசிசை நிற்க வைத்தார். கை மேல் பலன். சிக்சர் லைனில் சரியாக டு பிளசிஸ் கையில் தேடி வந்து பந்து விழுந்தது. வாட்டே கேட்ச் மேன்.

பார்த்து பார்த்து கொடுத்தார்

பார்த்து பார்த்து கொடுத்தார்

அதன்பின் பார்த்து பார்த்து பிளேயருக்கு தகுந்தபடி ஓவர்களை மாற்றி மாற்றி தோனி கொடுத்தார். டெத் ஓவர்களை நிகிடி மற்றும் சாகருக்கு கொடுத்தார். சாகர் பல நாட்களாக ஆசைப்பட்ட டெத் ஓவர் அவருக்கு கிடைத்தது. அதேபோல் அதில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணிக்கு ஷாக் கொடுத்தார் சாகர். களத்தில் விக்கெட்டுகள் சரிந்ததை பார்த்து ரோஹித்தே அதிர்ச்சி அடைந்தார்... இதனால் அடுத்து பவுலிங்கில் எப்படியாவது விட்டதை பிடிக்க மும்பை தீவிரமாக முயன்று வருகிறது.

Story first published: Saturday, September 19, 2020, 21:54 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+