RR vs MI : டாஸ் வென்ற மும்பை.. ரோஹித் சர்மா நீக்கம்.. ரசிகர்கள் சோகம்!
துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 44வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்றது.
மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியின் டாஸ் வெற்றியை விட ரசிகர்களை அதிகம் பாதித்தது ரோஹித் சர்மா தான்.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஆடுகிறாரா? இல்லையா? என ரசிகர்கள் ஆவலாக பார்த்து, ஏமாந்தனர். அவர் மீண்டும் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.

ராஜஸ்தான் - மும்பை போட்டி
2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 45வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணி நிலை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றில் பல தோல்விகளை சந்தித்து பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக மாற்றிக் கொண்டது. அந்த அணி இந்தப் போட்டியுடன் அடுத்து வரும் போட்டிகளையும் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

மும்பை நிலை
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி இன்னும் இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதி ஆகிவிடும். தற்போது ஆடி வரும் ஐபிஎல் அணிகளில் மும்பை அணிதான் வலுவாக காட்சி அளிக்கிறது.

ரோஹித் சர்மா இல்லை
அந்த அணியில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரே ஒரு பிரச்சனை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் தான். ரோஹித் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அணியில் நீக்கப்பட்டார். முன்னதாக சிஎஸ்கே போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.


Click it and Unblock the Notifications