Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வருஷமா திரும்பியே பார்க்காத தோனி.. ஆனாலும் எவ்வளவு நம்பிக்கை பாருங்க ரூத்துராஜுக்கு.. பளீர் பேச்சு

துபாய்: நேற்று சிஎஸ்கே அணிக்காக ஆடி அணியை வெற்றிபெற வைத்த ஓப்பனிங் வீரர் ரூத்துராஜ் தனது ஆட்டம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 145 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சிஎஸ்கே அணியில் ஓப்பனர் ரூத்துராஜ் அதிரடியாக 65 ரன்கள் எடுத்தார். இதனால் சிஎஸ்கே 18.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து வென்றது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த வெற்றி குறித்து பேட்டி அளித்துள்ள சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர் ரூத்துராஜ், அணிக்காக விளையாடி வெற்றிபெறுவது பெரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது.அதிலும் கடைசி வரை அவுட்டாகாமல் இருப்பது இன்னும் திருப்தி அளிக்கிறது. கடந்த சில நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அணியில் இருந்த மற்ற வீரர்களை விட கூடுதலாக நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.

கூடுதல் காலம்

கூடுதல் காலம்

கொரோனா காரணமாக கூடுதல் காலம் தனிமைப்படுத்தப்பட்டேன். எனக்கு பலர் உறுதுணையாக இருந்தனர். என் நண்பர்கள், குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். நான் நன்றாக பயிற்சி மேற்கொண்டேன். ஒரு நல்ல மேட்சை நான் விரைவில் ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. தோனியுடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறி உள்ளது.

தோல்வி

தோல்வி

முதல் மூன்று போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வி அடைந்தேன். ஆனால் அணி நிர்வாகம் எனக்கு ஆதரவு அளித்தது. தோனி எனக்கு ஆதரவு அளித்தார். இன்று பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்தது. எந்த பவுலர்களை அடிக்க வேண்டும், யாரை அடிக்க கூடாது என்பதை கணக்கு செய்து பேட்டிங் செய்தேன். அது எனக்கு கை கொடுத்தது என்று ரூத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ரூத்துராஜ்

ரூத்துராஜ்

ரூத்துராஜ் கெய்க்வாட்டை இரண்டு வருடமாக அணியில் வைத்து இருந்தாலும் பெரிய அளவில் தோனி இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அம்பதி ராயுடு காயம் காரணமாக இரண்டு போட்டியில் ஆடவில்லை. அப்போது மட்டுமே ரூத்துராஜுக்கு தோனி வாய்ப்பு கொடுத்தார். இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பி ரூத்துராஜுக்கு பிரஷர் கொடுத்தனர்.

நேற்று திறமை

நேற்று திறமை

இதனால் அந்த போட்டிகளில் அவரால் சரியாக ஆட முடியவில்லை. இந்த நிலையில் இத்தனை வருடம் காத்து இருந்தவர் நேற்று தனது திறமையை நிரூபித்தார். 2 வருடமாக தோனியின் கடைக்கண் பார்வை தன் மீது திரும்புமா என்று ரூத்துராஜ் எதிர்பார்த்து காத்து இருந்தார். நேற்று அந்த சம்பவம் நடந்தது. அதில் தனது திறமையை ரூத்துராஜ் நிரூபித்து இருக்கிறார்.

புகார்

புகார்

தோனி இத்தனை நாட்கள் தன்னை புறக்கணித்தது குறித்து ரூத்துராஜ் எந்த விதமான புகாரும் வைக்கவில்லை. தோனி எனக்கு ஆதரவாக இருந்தார் என்று பெருமையாக கூறியுள்ளார். இப்போதும் கூட தோனியுடன் ஆட வேண்டும் என்று ஆசை இருந்தது. அந்த ஆசை நிறைவேறிவிட்டது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ரூத்து.. இப்படி ஒரு திறமையைதான் தோனி இத்தனை நாட்கள் டிரெஸ்சிங் ரூமிலேயே அடைத்து வைத்து இருந்தார்.

Story first published: Monday, October 26, 2020, 15:42 [IST]
Other articles published on Oct 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+