யாருக்கும் குறைந்தவன் கிடையாது.. பயமே இல்லை.. கோலிக்கு எதிராக குதித்த சேவாக்.. கதையில் செம டிவிஸ்ட்!
துபாய்: பெங்களூர் அணியின் கேப்டன் கோலியை பார்த்து மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் முறைத்தது குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முதல்நாள் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோலியை பார்த்து சூர்ய குமார் யாதவ் கோபமாக முறைத்தார். பதிலுக்கு கோலியும் சூர்ய குமார் யாதவ் அருகே சென்று அவரை சீண்ட நினைத்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரிய அளவில் சர்ச்சையானது. இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் சூர்ய குமார் யாதவ் இப்படி செய்ததாக கூறுகிறார்கள்.

என்ன நடந்தது
இந்த நிலையில் கோலியை பார்த்து மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் முறைத்தது குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அந்த மேட்ச் மிகவும் சிறப்பாக இருந்தது. அதிலும் சூர்ய குமார் யாதவின் பேட்டிங் அதிரடியாக இருந்தது. விராட் கோலியிடம் சூர்ய குமார் யாதவ் தன்னை நிரூபித்து உள்ளார். நான் யாருக்கும் குறைந்தவன் இல்லை என்பதை சூர்ய குமார் யாதவ் நிரூபித்து உள்ளார்.

ஆஸ்திரேலியா
அதாவது ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வானவர்களை விட நான் எந்த விதத்திலும் குறைந்தவன் கிடையாது என்பதை சூர்ய குமார் யாதவ் நிரூபித்து இருக்கிறார். அதிலும் கோலியிடம் ஒரு ஷாட் அடித்துவிட்டு சூர்ய குமார் யாதவ் அவரை முறைத்து பார்த்தார்.

பயம் இல்லை
உங்களை பார்த்து எனக்கு பயம் இல்லை.. யாரை பார்த்தும் எனக்கு பயம் இல்லை, என்று சூர்ய குமார் யாதவ் நிரூபித்து உள்ளார். சூர்ய குமார் யாதவிற்கு கண்டிப்பாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவருக்கு போட்டியாக இருக்கும் யாரும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவது இல்லை.

யாரும் இல்லை
ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்ட், பண்ட் என்று யாருமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவது இல்லை. ஆனால் சூர்ய குமார் யாதவ் அப்படி கிடையாது. தொடர்ச்சியாக அவர் தன்னை நிரூபித்து வருகிறார். அவருக்கு உரிய மரியாதையை, வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று சேவாக் குறிப்பிட்டு இருக்கிறார். ஒருவகையில் சேவாக் சூர்ய குமார் பக்கம் நின்று இருக்கிறார்.

சேவாக் கருத்து
சேவாக் மட்டுமின்றி கிரிஸ் ஸ்ரீகாந்த், ஹர்பஜன் என்று பல முன்னாள் வீரர்கள் சூர்ய குமார் யாதவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கோலிக்கு ஆதரவாக மூத்த வீரர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் புதிய திருப்பமாக சூர்ய குமாருக்கு ஆதரவு பெருகி வருகிறது.


Click it and Unblock the Notifications