Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏதோ சரியில்லை.. ரோஹித் சர்மாவிற்கு என்ன ஆச்சு.. சிஎஸ்கே மேட்சிற்கு முன் மும்பையில் பெரிய குழப்பம்!

துபாய்: சிஎஸ்கே அணிக்கு எதிராக இன்று ஆடும் மும்பை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடக்க உள்ளது. மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் இந்த தொடரில் இரண்டாவது முறையாக இன்று மோதுகிறது.

கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் மும்பை உள்ளது. எப்படியாவது மும்பையை வீழ்த்தி தொடரில் உயிர்ப்புடன் இருக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இன்று ஆடும் மும்பை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மும்பை அணியில் இருக்கும் பல வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் யாரெல்லாம் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள் என்று முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

காயம்

காயம்

3 வீரர்கள் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் வருகிறது. இன்னொரு பக்கம் 3 அல்லது மொத்தமாக பெஞ்சில் இருக்கும் வீரரையும் சேர்த்து 4 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதில் இஷான் கிஷான் காயம் அடைந்து உள்ளது உறுதியாகிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

கடந்த போட்டி

கடந்த போட்டி

கடந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் போட்டி முடிந்த பின் பேட்டி அளிக்க வரவில்லை. மாறாக பொல்லார்ட்தான் நேற்று பேட்டி அளிக்க வந்தார் . ரோஹித் சர்மா இன்னும் தனது பிட்னஸை நிரூபிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சோதனை

சோதனை

இன்று அவரின் காயத்தை போட்டிக்கு முன் சோதனை செய்வார்கள். அதை பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். ரோஹித் சர்மா இன்று ஆடுவாரா, மாட்டாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதனால் மும்பை அணிக்குள் நிறைய குழப்பங்கள் நடந்து வருகிறது. அணிக்குள் உறுதியற்ற தன்மை நிலவி வருகிறது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா இன்று ஆடவில்லை என்றால் அவருக்கு பதிலாக பொல்லார்ட் கேப்டனாக இருப்பார். இன்று சிஎஸ்கே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பையை எதிர்கொள்கிறது. இப்படி இருக்கும் போது மும்பை அணியில் நிலவி வரும் குழப்பங்கள் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக திரும்ப வாய்ப்புள்ளது.

Story first published: Friday, October 23, 2020, 13:07 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+