Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை வீழ்த்த வகுக்கப்பட்ட வியூகம்.. சூர்யா குமார் யாதவ் உண்மையில் கிரேட்டா? வெளியான பரபர டேட்டா!

துபாய்: இந்திய அணியில் சூர்யா குமார் யாதவை எடுக்க வேண்டும் என்று பலரும் தொடர் கோரிக்கைகளை வைத்து வரும் நிலையில் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க உண்மையில் தகுதியானவரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புதான் தற்போது பெரிய அளவில் குழப்பத்தை, பிரச்சனையை இந்திய அணியில் ஏற்படுத்தி உள்ளது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்திய அணியில் முக்கியமான வீரர்களை கோலி ஒதுக்கிவிட்டார். வேண்டுமென்றே ரோஹித் சர்மாவிற்கு அணியில் இடம் கொடுக்கவில்லை. ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக இருக்கும் வீரர்களுக்கும் அணியில் இடம் கொடுக்கவில்லை என்று கோலி மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக அணியில் சூர்ய குமார் யாதவ் சேர்க்கப்படாதது பெரிய அளவில் சர்ச்சையானது.

சேர்க்கப்படவில்லை

சேர்க்கப்படவில்லை

கடந்த மூன்று வருடமாக ஐபிஎல் தொடரில் சூர்ய குமார் யாதவ் சிறப்பாக ஆடி வருகிறார்.பல முறை மும்பை அணியின் வெற்றிக்கு இவர்தான் காரணமாக இருந்தார்.ஆனாலும் தொடர்ந்து இவரை அணியில் புறக்கணித்து வருகிறார்கள். மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.. நேற்று வந்த வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கிறது.. ஏன் சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

கேள்வி

கேள்வி

இந்த நிலையில் கோலிதான் பாலிடிக்ஸ் செய்துவிட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கோலிதான் வேண்டும் என்றே இப்படி புறக்கணிக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் உண்மையில் சூர்ய குமார் யாதவை புறக்கணிக்க கோலி காரணம் இல்லை.. அதற்கு ஒரே காரணம் சூர்ய குமார் யாதவ்தான். சூர்ய குமார் யாதவ் கடந்த ஒரு வருடமாக முதல் தர போட்டிகளில் சரியாக ஆடவில்லை.

எப்படி

எப்படி

அதாவது முதல் தர போட்டிகளில் சூர்ய குமார் யாதவின் சராசரி 44 ரன்கள்தான். மாறாக மணீஷ் பாண்டே 50.1, ஷ்ரேயேஸ் ஐயர் 52.2, சுப்மான் கில் 73, ப்ரித்வி ஷா 57, மயங்க் அகர்வால் 48 ரன்களை சராசரியாக அடித்து உள்ளனர். அந்த வகையில் பார்க்கும் போது சூர்யா குமார் யாதவ் இவர்களை விட குறைவாகவே ரன்களை அடித்துள்ளார்.

மோசம்

மோசம்

இன்னொரு பக்கம் சையது முஷ்டாக் கோப்பை போன்ற டி 20 தொடர்களிலும் கூட சூர்ய குமார் யாதவ் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. ஏன் ஐபிஎல் தொடரிலும் இந்த முறை படிக்கல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால், கே. எல் ராகுல் ஆகியோருக்கு அடுத்துதான் சூர்ய குமார் யாதவ் இருக்கிறார். சூர்ய குமார் சிறந்த வீரர்தான்.. மும்பைக்கு மட்டுமே சிறந்த வீரர். மற்ற இளம் வீரர்களோடு ஒப்பிட்டால் இவர் தவிர்க்க முடியாத வீரர் கிடையாது.

தவிர்க்க முடியாது

தவிர்க்க முடியாது

ஆகவே கோலியோ தேர்வுக்குழுவோ.. யாராக இருந்தாலும் சூர்ய குமார் யாதவை எடுக்காததில் பெரிய அரசியல் இல்லை. புள்ளி விவரத்தின் படியே இவரை அணியில் எடுக்கவில்லை. ஆனால் தற்போது இதை வைத்து தேவையல்லாமல் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இது கோலியை காலி செய்ய வகுக்கப்பட்ட வியூகம்தான் என்று கூறுகிறார்கள். அதாவது கோலிக்கு இப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும். அவருக்கு எதிராக பிசிசிஐ அமைப்பை அதிருப்தி அடைய செய்ய வேண்டும். இதற்காகவே கோலியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, October 30, 2020, 11:36 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+