இதுதான் சரியான நேரம்.. வெளியே செல்லும் கோலி.. சூர்ய குமாருக்கு கூடி வரும் வாய்ப்பு.. செம டிவிஸ்ட்?
துபாய்: ஆஸ்திரேலிய தொடரில் கோலி சில போட்டிகளில் ஆட மாட்டார் என்பதால் .. இந்திய அணிக்குள் சூர்யா குமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் தேர்வாகி உள்ளனர்.
முக்கியமாக ஐபிஎல் தொடரில் இந்த முறை வீரர்கள் ஆடிய விதத்தை வைத்து பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி, நடராஜன், சைனி உள்ளிட்ட பலர் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு பெற்றது ஐபிஎல் மூலம்தான்.

ஆனால் என்ன
ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் இந்த அணியில் மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் இடம்பெறவில்லை. இவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். தொடர்ந்து மூன்று வருடமாக இவர் சிறப்பாக ஆடியும் கூட இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏன் இப்படி
இந்த நிலையில் சூர்ய குமார் யாதவை கோலி வேண்டுமென்றே அணியில் எடுக்கவில்லை. அரசியல் செய்கிறார் என்று புகார் உள்ளது. ரோஹித் சர்மாவிற்கு சூர்ய குமார் நெருக்கம்..அதனால்தான் களத்தில் கோலி சூர்ய குமார் யாதவிடம் கோபமாக செயல்படுகிறார். கோலிக்கு ஈகோ அதிகமாக இருப்பதால் இப்படி சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

நீக்கம்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் கோலி சில போட்டிகளில் ஆட மாட்டார் எனபதால்.. இந்திய அணிக்குள் சூர்யா குமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்திய கேப்டன் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அவருக்கும் அனுஸ்கா சர்மாவிற்கும் அடுத்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது.

வெளியேற்றம்
இதனால் கோலி டெஸ்ட் தொடரின் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அவரின் இடத்தில் சூர்யா குமார் யாதவை கொண்டு வர வேண்டும். மாற்று வீரராக சூர்யா குமார் யாதவை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

எப்படி
சூர்யா குமார் யாதவ் ஒன் டவுன் இறங்கி ஆட கூடிய வீரர். இவரை அணியில் எடுத்தால் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் சூர்ய குமார் யாதவை பாராட்டி உள்ளார்.. இதனால் இதுதான் அவரை அணியில் எடுக்க சரியான நேரம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications