அவரை உட்கார வையுங்கள்.. கோலி அல்ல.. ரோஹித்திற்கு செக் வைத்த மாஸ்டர்மைண்ட் இவர்தான்.. பரபர பின்னணி
துபாய்: இந்திய அணியில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படாமல் போனதற்கு யார் காரணம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இவரின் காயம் காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாட உள்ளது. ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது.

கோலி
இந்த அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. ரோஹித் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் கோலிதான் என்று கூறப்பட்டது. கோலிதான் அரசியல் செய்து ரோஹித் சர்மாவை உட்கார வைத்துவிட்டார். ரோஹித்தை ஓரம்கட்ட ஆசைப்பட்டு கோலி இப்படி செய்துவிட்டார் என்று இணையத்தில் பலர் கோலிக்கு எதிராக பேசினார்கள்.

உண்மை என்ன
ஆனால் உண்மையில் ரோஹித்திற்கு எதிராக நிதின் பட்டேல் என்பவர் கொடுத்த ரிப்போர்ட்தான் இந்த நீக்கத்திற்கு காரணம் என்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோவாக நிதின் பட்டேல் இருக்கிறார். இவர்தான் ரோஹித் சர்மாவின் உடல்நிலையை சோதனை செய்தார்.

காலில் காயம்
ரோஹித் சர்மா காலில் ஏற்பட்ட காயத்தை இவர்தான் சோதனை செய்து இருக்கிறார். இவர்தான் ரோஹித் சர்மா குறித்து விரிவான அறிக்கை ஒன்று பிசிசிஐக்கு அனுப்பி உள்ளார். அதில் ரோஹித் சர்மா இப்போது ஆட முடியாது. 3 வாரங்கள் அவர் கிரிக்கெட் ஆட கூடாது என்று கூறியுள்ளார்.

நிலை என்ன
அதேபோல் நிதின் பட்டேல் ரோஹித் சர்மாவின் உடல்நிலையை சோதனை செய்ய இரண்டு சிறப்பு மருத்துவர்களை அணுகி உள்ளார். இவர்கள் இரண்டு பேருமே ரோஹித் சர்மா இப்போது ஆட முடியாது,2-3 வாரம் ஓய்வு தேவை என்று கூறியுள்ளனர். இந்த ரிப்போர்டை நிதின் பட்டேல் இந்திய தேர்வு குழுவிற்கு அனுப்பி உள்ளார்.

முடிவு
இதையடுத்து சுனில் ஜோஷி தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு ரோஹித் சர்மாவை அணியில் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். ரோஹித் சர்மா உடல்நிலையை கண்காணிப்போம். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் அதன்பின் முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications