For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே எதிர்பார்க்கவில்லை.. தோனி எடுத்த முடிவால் இங்கிலாந்து வரை வைரலான அந்த தமிழ் வாக்கியம்.. செம்ம

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி எடுத்த முடிவு ஒன்றால் தமிழ் வாக்கியம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு 2020 ஐபிஎல் தொடர் பல சுவாரசிய திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத அளவிற்கு ஆட்டங்கள் சென்று கொண்டு இருக்கிறது.

2020 ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு லீக் ஆட்டங்களே மீதம் உள்ளது. ஆனால் இதுவரை ஒரே ஒரு அணி மட்டும்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

என்ன

என்ன

இன்று மற்றும் நாளை நடக்கும் போட்டியில்தான் பிளே ஆப் செல்லும் மற்ற அணிகள் எது என்று உறுதியாகும். நேற்று இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே ஆடியது. பஞ்சாப்பை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி வெற்றியோடு தொடரை முடித்துக்கொண்டது.

முடிந்தது

முடிந்தது

இந்த நிலையில் நேற்று போட்டிக்கு முன்பாக பேசிய கேப்டன் தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து தான் ஓய்வு பெற போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார். சிஎஸ்கே அணியில் அடுத்த வருடமும் கண்டிப்பாக ஆடுவேன்.. ஓய்வு பெற போவதில்லை என்று கேப்டன் தோனி திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தோனி ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று நிறைய வதந்திகள் பரவிய நிலையில் தற்போது துணிச்சலாக தோனி தனது முடிவை அறிவித்துள்ளார். இந்த நிலையில் தோனியின் இந்த முடிவை உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னாள் நியூசிலாந்து வீரர்கள், இங்கிலாந்து வீரர்கள் , ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.

செய்தி நிறுவனங்கள்

செய்தி நிறுவனங்கள்

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் கிரிக்கெட் செய்தி நிறுவனங்கள் பல தோனியின் முடிவை பாராட்டி வருகிறார்கள். நேற்று தோனி இந்த முடிவை அறிவித்த போது.. இணையத்தில் இதோடு சேர்த்து "தல தலதான்" என்ற தமிழ் வாக்கியமும் வைரலானது. தமிழகத்தை சேர்ந்த சில கிரிக்கெட் பிரபலங்கள்.. தோனியை புகழ இந்த வாசகத்தை பயன்படுத்துவது வழக்கம்.. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி கூட தோனியை புகழ இந்த வாசகத்தை பயன்படுத்தி இருந்தார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து பெண்கள் அணி கிரிக்கெட் வீரர் கேட் கிராஸ் தொடங்கி பல கிரிக்கெட் வீரர்கள் இந்த தல தலதான் என்ற தமிழ் வாசகத்தை டிவிட் செய்தனர். தோனியின் முடிவை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும் இந்த வாசகத்தை இவர்கள் பயன்படுத்தி இருந்தனர். இதனால் டிவிட்டரில் இந்த வார்த்தை நேற்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 2, 2020, 14:02 [IST]
Other articles published on Nov 2, 2020
English summary
IPL 2020: Thala Thalathan goes viral after Dhoni decision to play in next season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X