யோவ்.. அவர்கிட்ட என்ன பார்த்த? தோனியை சீண்டிய அந்த வார்த்தை.. கைவிட்ட சிஎஸ்கே.. என்ன நடந்தது?
துபாய்: சிஎஸ்கே அணியில் இன்று செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்களுக்கு பின் நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வைத்த சில விமர்சனமும் காரணமாக சொல்லப்படுகிறது.
மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து தற்போது சிஎஸ்கே அணி பேட்டிங் இறங்கி உள்ளது. சிஎஸ்கே அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்கள்
தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து வாட்சன், சாவ்லா, ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பதிலாக இன்று அணிக்குன் ஜெகதீசன், ரூத்துராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் ஆகியோர் அணியில் வந்துள்ளனர். மொத்தமாக சிஎஸ்கே அணி தற்போது மாற்றம் அடைந்துள்ளது.

மாற்றம் ஏன்
சிஎஸ்கே அணியில் செய்யப்பட்ட இந்த மாற்றத்திற்கு தோனி மீது சென்னை லாபி வைத்த அழுத்தமும் காரணம் என்று கூறுகிறார்கள். அதாவது சிஎஸ்கே அணிக்குள் வாய்ஸ் இருக்கும் முன்னாள் தமிழக வீரர்கள் கொடுத்த அழுத்தம்தான் சிஎஸ்கே அணியில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் வைத்த விமர்சனங்கள் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

என்ன சொன்னார்
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின் பேசிய தோனி, அணியில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறினார். இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இதை விமர்சனம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தோனி சொல்வதை ஏற்றுக்கொள் முடியாது. யோவ்.. எப்படி இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறலாம்.

ஜாதவ்
ஜெகதீசனிடம் முதல் போட்டியில் ஸ்பார்க் இருந்ததே பார்க்கவில்லையா? ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க் ஜாதவிடம் இருந்ததா என்று ஸ்ரீகாந்த் கடுமையாக கேட்டு இருந்தார். ஸ்ரீகாந்த் மட்டுமின்றி முன்னாள் தமிழக வீரர்கள், சிஎஸ்கேவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கிய நபர்கள் இதே விமர்சனத்தை வைத்தனர்.

லாபி
சென்னை லாபி கொடுத்த இந்த அழுத்தம் காரணமாக தற்போது சிஎஸ்கே அணி மொத்தமாக மாறியுள்ளது.தோனியை இந்த விமர்சனங்கள் கடுமையாக பாதித்தது. பர்சனலாக இந்த விமர்சனங்கள் தோனியை சீண்டி உள்ளது

தோனி
இதனால்தான் நான் இளைஞர்களை இறக்குகிறேன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று தோனி முடிவு செய்துள்ளார். சிஎஸ்கே அணியும் யாராவது இறங்கினால் இறங்கட்டும் என்று இளம் வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த மாற்றம் சிஎஸ்கே அணிக்கு பெரிதாக பலன் அளிக்காது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications