For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாறி மாறி கத்திக்கொண்ட கோலி - ரோஹித்.. போட்டிக்கு இடையே மைதானத்தில் பரபர மோதல்.. என்ன நடந்தது?

துபாய்: பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்று துபாயில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த போட்டியில் கோலி, ரோஹித் சர்மா இடையே லேசான உரசல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்பட்ட பெங்களூர்- மும்பை இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது .

தொடக்கத்தில் இருந்து பெங்களூர் இந்த போட்டியில் அதிரடியாக ஆடியது. தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ் என்று மூன்று வீரர்கள் பெங்களூர் அணியில் அரை சதம் அடித்தனர். இதனால் பெங்களூர் 20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தது.

சத்தம்

சத்தம்

இந்த நிலையில் இன்றைய போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதும் ரோஹித் சர்மா அப்படியே உற்சாகம் அடைந்தார். ராகுல் சாஹர் பவுலிங்கில் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதுவும் சரியாக ரோஹித் சர்மா கையில் கேட்ச் கொடுத்து கோலி அவுட்டானார்.

கேட்ச் பிடித்தார்

கேட்ச் பிடித்தார்

11 பந்துகள் பிடித்த கோலி இந்த போட்டியில் வெறும் 3 ரன்கள்தான் எடுத்தார். கோலியின் வீக்னசை கணித்து சரியான லெந்தில் ராகுல் சாகர் பந்து வீச கவர் திசையில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து கோலி அவுட்டானார். கோலியின் கேட்சை பிடித்துவிட்டு ரோஹித் கோபமாக கத்தினார்.. உன்னை அவுட் செய்துவிட்டேன் என்பது போல திமிராக கத்தினார்.

கோபம்

கோபம்

இதை கோலி கண்டுகொள்ளாமல் தலையை தொங்க போட்டபடி அப்படியே நடந்து சென்றார். ஆனால் மும்பை அணி பேட்டிங் செய்யும் போதும் இதேபோல் சம்பவம் நடந்தது. மும்பை அணி பேட்டிங் இறங்கிய தொடக்கத்தில் இருந்து திணறியது. ரோஹித் சர்மா பேட்டிங் வந்ததும் சரியாக வாஷிங்க்டன் சுந்தரை பவுலிங் செய்ய கோலி அனுப்பினார்.

ரோஹித் அவுட்

ரோஹித் அவுட்

சரியாக இரண்டாவது ஓவரின் 4வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் போட்ட பந்தை மிட் விக்கெட் நோக்கி திருப்பி சிக்ஸ் அடிக்க ரோஹித் முயன்றார் . ஆனால் அங்கு இருந்த நெஹி அசால்ட்டாக பந்தை பிடித்து சம்பவம் செய்தார். இதை எதிர்பார்க்காத ரோஹித் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். 8 பந்துகளில் வெறும் 8 ரன்கள் எடுத்து இருந்த ரோஹித் நெஹியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி பெவிலியன் சென்றார்.

வேகமாக ஓடி வந்தார்

வேகமாக ஓடி வந்தார்

ரோஹித் அவுட்டானதை பார்த்தது கோலி உற்சாகம் அடைந்தார். கோபமாக கத்திக் கொண்டே கோலி வேகமாக ஓடி வந்தார். கோலியின் விக்கெட்டை ரோஹித் எடுத்துவிட்டு எப்படி கத்தினாரோ அதை விட மோசமாக கத்திக் கொண்டே கோலி ஓடி வந்தார். கோலியின் இந்த ரியாக்சன் ரோஹித்தை வெறுப்பேற்றுவது போலவே இருந்தது.

உரசல்

உரசல்

கடந்த உலகக் கோப்பை தொடரில் இருந்தே ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே பெரிய அளவில் நட்பு இல்லை. கேப்டன்சி காரணமாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தது. அதன்பின் இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாட பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் இன்றைய போட்டியில் இவர்கள் இடையே லேசான உரசல் ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, September 28, 2020, 22:26 [IST]
Other articles published on Sep 28, 2020
English summary
IPL 2020: The ugly rival between Kohli and Rohit in today match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+