Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்களை முதலில் தடை செய்ய வேண்டும்.. ஐபிஎல்லில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்.. கொதிக்கும் பெரிய தலைகள்

துபாய்: 2020 ஐபிஎல் தொடர் முழுக்க நடுவர்கள் பலர் மோசமாக செயல்படுவதும், தவறான தீர்ப்புகளை வழங்குவதும் வழக்கமாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மும்பை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் இன்னும் 4 லீக் போட்டிகள் மீதம் உள்ளது.

இந்த நிலையில் பிளே ஆப் செல்வதற்காக பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

போட்டி

போட்டி

2020 ஐபிஎல் தொடர் இதுவரை நடந்த தொடர்களை விட மிக சிறப்பாக அமைந்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த ஐபிஎல் தொடர் முழுக்க நடுவர்கள் பலர் மோசமாக செயல்படுவதும், தவறான தீர்ப்புகளை வழங்குவதும் வழக்கமாகி உள்ளது. களத்தில் இருக்கும் நடுவர்கள் சரியான முடிவுகளை எடுப்பது இல்லை, நிறைய தவறுகளை செய்கிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

புகார்

புகார்

தொடரின் தொடக்கத்தில் இருந்தே இந்த புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பஞ்சாப் - டெல்லி போட்டியில் நடுவர் ஒரு ரன் கொடுக்காமல் போனதால்.. சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றது. பஞ்சாப் அணியின் தோல்விக்கு அன்று நடுவரின் முடிவே காரணமாக இருந்தது. சிஎஸ்கே அணியில் தோனி முதல் முதலாக பேட்டிங் இறங்கிய போது தவறாக அவுட் கொடுத்தது, பின் டிஆர்எஸ்சில் மாற்றப்பட்டது என்று நிறைய தவறுகளை செய்து வருகிறார்கள்.

தவறுகள்

தவறுகள்

தவறுகள் என்பதையும் தாண்டி.. சாதாரண முடிவு எடுக்கவே நடுவர்கள் இப்போதெல்லாம் திணறுகிறார்கள். மிக சாதாரணமான வைட் பந்திற்கு கூட மூன்றாவது நடுவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் தோனி கொஞ்சம் முறைத்து பார்த்ததும்.. வைட் கொடுக்க வேண்டிய பந்தை கூட வைட் இல்லை என்று கூறுகிறார்கள்... அந்த அளவிற்குதான் நடுவர்கள் இந்த முறை ஆளுமையுடன் இருக்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதேபோல் இந்த முறை நிறைய தடவை நடுவர்கள் கூறிய தீர்ப்பு தவறாகி பின் டிஆர்எஸ்சில் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடர் முழுக்க நடுவர்கள் பல முறை தவறான தீர்ப்புகளை வழங்கி அதை மாற்றி உள்ளனர். நேற்று நடந்த போட்டியிலும் கூட கேன் வில்லியம்சனுக்கு உடானா போட்ட நோ பாலை நடுவர் இல்லை என்று தீர்ப்பு வழங்கினார்.

நேற்று எப்படி

நேற்று எப்படி

நேற்று களத்தில் நடுவார்கள் நடந்து கொண்ட விதம் இணையம் முழுக்க விமர்சனத்தை சந்தித்து உள்ளது.அதோடு இந்த தொடரில் பிரீத்தி ஜிந்தா, ஹர்பஜன், ஆர்ச்சர், சேவாக், ஹர்ஷா போக்லே என்று கிரிக்கெட் துறையை சேர்ந்த பலர் நடுவர்களுக்கு எதிராக பேசி உள்ளனர்.நடுவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

தடை

தடை

சில நடுவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே தவறுகளை அடிக்கடி செய்கிறார்கள். அடிக்கடி தவறு செய்யும் நடுவர்களை நீக்க வேண்டும், அல்லது தடை செய்ய வேண்டும்.. அதற்கு பதிலாக அனுபவம் மிக்க நல்ல நடுவர்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது .

Story first published: Sunday, November 1, 2020, 10:23 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+