Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சி கொடுத்த சிஎஸ்கே..கலங்கி நின்ற ரசிகர்கள்

சென்னை: 2020 வருடம் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான வருடமாக உருவெடுத்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மிக மோசமான சரிவை சிஎஸ்கே அணி இந்த வருடம் சந்தித்துள்ளது.

2020ல் கிரிக்கெட் உலகில் பல சம்பவங்கள் நடந்தது. புதிய பல திறமையான வீரர்கள் உருவானார்கள். இந்திய அணிக்கு உள்ளேயே பல மேட்ச் வின்னர்கள் உருவானார்கள்.

முக்கியமாக ஐபிஎல் தொடரில் பல திறமையான வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் சிஎஸ்கே அணி மட்டும் மிக மோசமான சரிவை இந்த வருடம் சந்தித்தது.

எப்படி

எப்படி

2020 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே அணிக்கு கெட்ட செய்தியாக வந்தது. முதலில் குடும்ப காரணங்களால் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் வெளியேறினார். அதன்பின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா தனது உறவினர்கள் கொல்லப்பட்ட காரணத்தால் தொடரில் இருந்து வெளியேறினார்.

 சிக்கல்

சிக்கல்

இரண்டு முக்கிய வீரர்கள் மொத்தமாக வெளியேறிய பின் சிஎஸ்கே அணி திணற தொடங்கியது. இன்னொரு பக்கம் பிராவோ காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் சிஎஸ்கே அணியில் டு பிளசிஸ், வாட்சன் இறங்கி ஆடி வந்தனர். முதல் போட்டியில் மேட்ச் வின்னராக இருந்த அம்பதி ராயுடுவும் காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடவில்லை.

வெற்றி

வெற்றி

முதல் போட்டியை வெற்றியோடு தொடங்கினாலும் அடுத்தடுத்து டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளுடன் கூட சென்னை தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்த கொல்கத்தா, பெங்களூர் போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் கூட சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதெல்லாம் போக அணியில் முரளி விஜய், சாவ்லா, வாட்சன் என்று பெரிய படையே பார்ம் இன்றி தவித்தது.

தோனி

தோனி

கேப்டன் தோனியும் மிக மோசமான பார்மில் கஷ்டப்பட்டார். சாம் கரன், ஜடேஜா மட்டுமே கொஞ்சம் சென்னைக்கு அணிக்காக ஆடினார்கள் . இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி சர்ச்சையை கிளப்பியது. கடைசியாக நடந்த 3 போட்டிகளில் அதே இளைஞர் ரூத்துராஜ் கெய்க்கா உதவியுடன் வரிசையாக சிஎஸ்கே வென்றது என்று இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு ரோலர் கோஸ்டர் ரெய்ட் போலவே இருந்தது.

எப்படி

எப்படி

சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய ஐபிஎல் தொடர்களில் முதல்முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. முதல் முறை சிஎஸ்கே அணி இவ்வளவு பெரிய சரிவை சந்தித்துள்ளது. சிஎஸ்கே அணியின் இந்த சரிவால் சென்னை ரசிகர்கள் எல்லோரும் கலக்கத்தில் உள்ளனர்.

கலக்கம்

கலக்கம்

இதனால் அடுத்த சீசனில் நல்ல அணியுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது . வாட்சன் வேறு ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அடுத்த போட்டிக்கு முன் நடக்கும் ஏலத்தில் சிறப்பான வீரர்களை ஏலம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

Story first published: Tuesday, December 15, 2020, 17:46 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+