For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு பொறுப்பான வீரர் இப்படி செய்யலாமா?.. தவறான போட்டோவை பகிர்ந்த ஜாம்பவான்.. மிகப்பெரிய சர்ச்சை!

துபாய்: பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜஃபார் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

2020 ஐபிஎல் தொடர் தற்போது உச்சகட்ட விறுவிறுப்பில் சென்று கொண்டு இருக்கிறது. டேபிள் டாப்பில் இருந்த அணிகள் வரிசையாக தோல்வி அடைந்த நிலையில் கீழே இருக்கும் அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.

தற்போது இருக்கும் நிலையில் மும்பை அணி பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்டது. அதேபோல் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

எப்படி

எப்படி

மீதம் இருக்கும் அணிகளில் நாளை டெல்லி மற்றும் பெங்களூர் இடையே மோதல் நடக்கிறது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆப் செல்லும். இதனால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

வேறு என்ன

வேறு என்ன

மீதம் இருக்கும் அணிகளில் பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும் இன்னும் ஒரு போட்டியில் ஆட வேண்டும். இந்த அணிகள் இதுவரை 6 போட்டியில் வென்றுள்ளது. இந்த நிலையில் 7 போட்டிகளில் வெல்லும் அணிகள்.. ரன் ரேட் அடிப்படையில் இந்த முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பு உள்ளது.

சண்டை

சண்டை

இதனால் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, பெங்களூர், பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தை பிடிக்க 6 அணிகள் சண்டை போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை கிண்டல் செய்யும் விதமாக பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜஃபார் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

என்ன புகைப்படம்

என்ன புகைப்படம்

அதாவது ஒரு சின்ன பெண்ணுக்கு 6 ஆண்கள் போட்டி போடுவது போல பாலியல் ரீதியான புகைப்படம் ஒன்றை வாசிம் ஜஃபார் பகிர்ந்து இருந்தார். ஆங்கில மீம்களில் பயன்படுத்தப்படும் பாலியல் ரீதியான புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருந்தார். அவரின் இந்த செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இவர் இந்த மீமை வெளியிட்டு சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துவிட்டார். ஆனாலும் ஒரு பொறுப்பான வீரர், பல நூறு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடிய வீரர் பாலியல் ரீதியாக பொது வெளியில் இப்படி ஜோக் செய்யலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மோசம்

மோசம்

அதிலும்.. பாலியல் ரீதியாக பெண்களை கிண்டல் செய்யும் வகையில் அந்த மீம் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு அணியின் பயிற்சியாளர். அதிலும் உங்கள் அணியின் உரிமையாளர் ஒரு பெண். அப்படி இருக்கும் போது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இப்படி புகைப்படம் வெளியிடலாமா என்று விமர்சனம் செய்துள்ளனர்.

Story first published: Sunday, November 1, 2020, 13:33 [IST]
Other articles published on Nov 1, 2020
English summary
IPL 2020: Wasim Jaffer adult meme on the play of scenario goes viral
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X