Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதான் அவர் வந்துட்டாரே.. இனி எதுக்கு.. சிஎஸ்கேவிற்காக ரத்தம் சிந்தியவரை.. வீட்டிற்கு அனுப்ப பிளான்?!

துபாய்: சிஎஸ்கே அணிக்காக ரத்தம் சிந்தி விளையாடிய ஷேன் வாட்சன் அடுத்த வருடம் சிஎஸ்கே அணிக்காக ஆடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக ஆடி உள்ளது. இதுவரை 10 சீசன்களில் சிறப்பாக ஆடி பிளே ஆப் சென்ற சிஎஸ்கே இந்த முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்து இருக்கிறது.

எல்லா வருடமும் சிஎஸ்கேவில் ஒரு சில வீரர்கள் சொதப்பினாலும் மற்ற வீரர்கள் நன்றாக ஆடி அணியை வழி நடத்துவார்கள். ஆனால் இந்த வருடம் அணியில் எந்த வீரரும் ஒரு மேட்ச் வின்னர் போல செயல்படவில்லை.

ஏன்

ஏன்

அதிலும் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான போட்டிகளில் உதவும் வாட்சன் இந்த முறை சரியாக ஆடவில்லை. இந்த சீசன் முழுக்க வாட்சன் 2-3 போட்டிகளை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். அதிலும் தொடக்கத்தில் நடந்த சில போட்டிகளில் சிஎஸ்கேவின் தோல்விக்கு வாட்சனின் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.

மோசம்

மோசம்

இந்த நிலையில் அடுத்த சீசனுக்கு புதிய வீரர்களுடன் களமிறங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. அணியில் பார்மில் இருக்கும் வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை தூக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முக்கியமாக மூத்த வீரர்கள் சிலரை அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக இளைஞர்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

யார்

யார்

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிதான் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் சிஎஸ்கே அணியில் கண்டிப்பாக ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ரெய்னா அடுத்த வருடம் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. டு பிளசிஸ் அணியில் நீடிப்பாரா மாட்டாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

வாட்சன்

வாட்சன்

ஆனால் அணியில் இருந்து கண்டிப்பாக வாட்சன் நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. வாட்சன் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடினார். இதனால் வாட்சன் இடத்தில் நிரந்தரமாக ரூத்துராஜை இறக்க சிஎஸ்கே ஆலோசனை செய்து வருகிறது. பெங்களூர் அணிக்கு படிக்கல் போல சிஎஸ்கேவிற்கு ரூத்துராஜ் செயல்படுவார் என்று அணி நிர்வாகம் நினைக்கிறது.

என்ன நினைக்கிறது

என்ன நினைக்கிறது

சிஎஸ்கே அணியில் ரூத்துராஜ் ஓப்பனிங் இறங்குவார். அவருடன் இன்னொரு மூத்த வீரர் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ரூத்துராஜ் வந்துவிட்டதால் இனி வாட்சன் தேவை இருக்காது என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் கருதுவதாக கூறுகிறார்கள். ரூத்துராஜ் பார்மில் இருக்கிறார், சிஎஸ்கேவில் இவரை மெருகேற்றினால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அணி நிர்வாகம் கருதுகிறது

.

வயது

வயது

வாட்சனுக்கும் வயதாகிக் கொண்டே செல்கிறது. அடுத்த சீசனில் இவர் காயம் எல்லாம் அடைந்தால் மிகவும் சிரமம். இவர் காலில் ரத்தம் வடிய வடிய சிஎஸ்கே அணிக்காக ஆடியவர்தான். ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் சில கசப்பான முடிவை எடுக்கும் என்று கூறுகிறார்கள். வாட்சனின் நீக்கம் அதில் முக்கியமான முடிவாக இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Tuesday, October 27, 2020, 14:58 [IST]
Other articles published on Oct 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+