
தவறு
இந்த தொடர் எங்களுக்கு மோசமாக இருந்தது. எங்கள் முழு திறமையை நாங்கள் இந்த தொடரில் காட்டவில்லை. இந்த தொடரின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். கடைசி நான்கு போட்டியில்தான் எங்கள் அணி முழுமையான அணியாக உருவெடுத்தது.

மோசமான பின்னடைவு
நீங்கள் மிக மோசமான பின்னடைவை சந்தித்து இருந்தால்.. அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். சில விஷயங்களை மாற்ற முடியாது. ஒரு அணியில் இருக்கும் எல்லோரும் அணிக்காக உழைக்க வேண்டும். இந்த தொடரில் ஆடிய சில வீரர்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது .

பிசிசிஐ
பிசிசிஐ அமைப்பை நம்பித்தான் இப்போது இருக்கிறோம். அவர்கள் எங்கே ஏலம் நடத்துகிறார்கள்,எப்படி ஏலம் நடத்துகிறார்கள் என்பதை பொறுத்தே எதிர்காலம் முடிவு செய்யப்படும். எங்கள் அணியின் அடிப்படை அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

மாற்றம்
அடுத்த 10 வருடங்களுக்கு ஏற்றபடி அணியை மாற்ற வேண்டும்.ஐபிஎல் தொடக்கத்தில் நாங்கள் உருவாக்கிய அணி சிறப்பாக இருந்தது. அடிப்படை அணியை முறையாக உருவாக்கி அதை வைத்து ஆடினேன். நாங்கள் கொஞ்சம் லேசாக மாற்றம் அடைய வேண்டும்.

எதிர்காலம்
லேசாக சில விஷயங்களை மாற்ற வேண்டும். எதிர்கால சந்ததிக்கு எங்கள் அணியை அளிக்க வேண்டும்,. முறையான அணியை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு அணியை அளிக்க வேண்டும் என்று தோனி குறிப்பிட்டுள்ளார். ஏலத்தை பொறுத்தே சிஎஸ்கே அணியில் மாற்றம் செய்ய முடியும் என்பதால்.. பிசிசிஐ அமைப்பை நம்பி இருப்பதாக தோனி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications