எந்த முடிவும் எடுக்கவில்லை.. கங்குலி சொன்ன அந்த விஷயம்.. தோனி திட்டத்திற்கு வைக்கப்பட்ட மறைமுக செக்?
துபாய்: 2021 ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கங்குலி குறிப்பிட்டு உள்ளார்.
2020 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துள்ளது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடக்க உள்ளது. இன்று நடக்கும் போட்டியின் மூலம் பிளே ஆப் செல்ல போகும் கடைசி அணி எது என்று தெரிந்துவிடும்.
இந்த நிலையில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே அணி முதல்முறையாக இழந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் புதிய படையோடு இறங்க திட்டமிட்டுள்ளது.

திட்டம்
அடுத்த சீசனுக்கான திட்டங்களை சிஎஸ்கே அணி இப்போதே வகுக்க தொடங்கிவிட்டது. யாரெல்லாம் அணியில் இருக்கலாம், யாரை எல்லாம் நீக்கலாம் என்று சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது. வாட்சன் ஏற்கனவே ஓய்வு முடிவை எடுத்துவிட்டார். மூத்த வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு அணிக்குள் இளம் வீரர்களை கொண்டு வரலாம் என்று சிஎஸ்கே நினைக்கிறது.

ஏலம்
அடுத்த வருட ஏலம் பிப்ரவரி மாதம் நடக்கும் என்கிறார்கள். இந்த ஏலத்தில் பெரிய பெரிய வீரர்களை எடுக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது. அணியின் கோர் குரூப்பை மாற்ற போகிறோம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியே வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

என்ன
ஆனால் அடுத்த வருடம் ஏலம் பெரிய அளவில் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். சிஎஸ்கே அணி கனவு காண்பது போல பெரிய ஏலம் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள. பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்து இருக்கும் பேட்டியும் கூட இதை உறுதி செய்துள்ளது.

கங்குலி பேட்டி
கங்குலி அளித்துள்ள பேட்டியில், அடுத்த வருட ஏலம் குறித்து எதுவும் ஆலோசனை செய்யவில்லை. பெரிய ஏலம் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அதை பிறகு பார்க்கலாம். முதலில் இந்த சீசன் முடியட்டும். இந்த சீசன் முதலில் வெற்றிகரமாக முடியட்டும், என்று கூறியுள்ளார். அடுத்த சீசன் ஏலத்தை பெரிய அளவில் நடத்தும் எண்ணம் கங்குலிக்கு இல்லை என்கிறார்கள்.

எண்ணம் இல்லை
அடுத்த சீசன் ஏலம் சின்னதாக சாதாரணமாக நடக்கட்டும், அதற்கு பின் 2022க்கு முன் பெரிய ஏலம் நடத்தலாம் என்று கங்குலி நினைப்பதாக கூறுகிறார்கள். பிசிசிஐ அமைப்பின் பழைய திட்டமும் இதுதான். ஏனென்றால்.. அடுத்த சீசன் தொடங்க இன்னும் 6-7 மாதங்களே உள்ளது. அதற்குள் பெரிய ஏலம் நடத்துவது கடினமான காரியம் என்பதால் சின்ன ஏலம் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது.

தோனி பிளான்
இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி போட்டு வைத்து இருந்த ''புதிய கோர் குருப்'' திட்டத்திற்கு சிக்கல் வரலாம் என்கிறார்கள். பெரிய அளவில் ஏலம் நடக்காது என்பதால் சிஎஸ்கேவில் புதிய வீரர்கள் வர வாய்ப்பு இல்லை.. ஒன்று இரண்டு வீரர்கள் வேண்டுமானால் வரலாம்.. மொத்தமாக கோர் குரூப்பை மாற்ற முடியாது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications