Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போனவர் அப்படியே போகட்டும்.. தோனி உருவாக்கும் புதிய "கோர்-குரூப்''.. இடது கைக்கு கல்தா.. பரபர பின்னணி

துபாய்: 2021ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ரெய்னா இருப்பாரா என்று கேள்வி எழுப்பி உள்ளது. நேற்று தோனி அளித்த பேட்டி இந்த சந்தேகத்தை வலுவாக்கி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறி உள்ள நிலையில்.. அடுத்த சீசனுக்கு இப்போதே சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது.

அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஆட போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்த கணிப்புகள், விவாதங்கள் இப்போதே எழ தொடங்கி உள்ளது. தோனியும் சூசகமாக நிறைய விஷயங்களை தெரிவித்து வருகிறார்.

என்ன

என்ன

இந்த நிலையில் அடுத்த சீசனுக்கு முன் சிஎஸ்கே அணி புதிய கோர் குரூப் ஒன்றை உருவாக்க உள்ளது. கோர் குருப் என்றால் 4-5 நிலையான வீரர்களை கொண்ட அடிப்படை அணியை உருவாக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் தோனி, ஜடேஜா, பிராவோ, டு பிளசிஸ், ரெய்னா போன்ற வீரர்கள் இந்த கோர் குரூப்பை சேர்ந்தவர்கள்தான் .

நீண்ட காலம்

நீண்ட காலம்

இந்த கோர் குரூப்பில் இருக்கும் வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக நீண்ட வருடங்களாக ஆடி வருகிறார்கள். அணியில் மற்ற வீரர்கள் உள்ளே வருவதும், வெளியே அனுப்பப்படுவதும் வருடா வருடம் நடக்கும். ஆனால் இந்த கோர் குரூப்தான் சிஎஸ்கேவின் அடிப்படை. இதில் எப்போதும் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்காது.

அடுத்த வருடம்

அடுத்த வருடம்

இந்த நிலையில் அடுத்த வருடம் நடக்கும் சீசனில் இந்த கோர் குரூப்பில் மாற்றம் செய்ய சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இளைஞர்களுக்கு வழி விட்டு புதிய அணியை உருவாக்க தோனி முடிவு செய்துள்ளார். அடுத்த 10 வருடங்களுக்கு சிஎஸ்கே அணியில் ஆட போகும் கோர் குரூப் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தோனி முடிவு செய்துள்ளார்.

முடிவு

முடிவு

நேற்று பேட்டியில் இது குறித்து பேசிய தோனி, எங்கள் அணியின் அடிப்படை அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அடுத்த 10 வருடங்களுக்கு ஏற்றபடி அணியை மாற்ற வேண்டும். ஐபிஎல் தொடக்கத்தில் நாங்கள் உருவாக்கிய அணி சிறப்பாக இருந்தது. அடிப்படை அணியை முறையாக உருவாக்கி அதை வைத்து ஆடினேன். நாங்கள் கொஞ்சம் லேசாக மாற்றம் அடைய வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்றம்

மாற்றம்

இதனால் சிஎஸ்கேவின் கோர் குரூப்பில் மாற்றம் செய்யப்படும் என்பதை தோனி ஒப்புக்கொண்டுள்ளார். இதில் பெரும்பாலும் சாம் கரன், ரூத்துராஜ் ஆகியோர் இணைய வாய்ப்புள்ளது. ஆம் சிஎஸ்கே அணியின் கோர் குரூப்பில் இவர்கள் ஆட வாய்ப்புள்ளது. கோர் குரூப்பில் தோனி, ஜடேஜா, டு பிளசிஸ் நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மீதம் இருக்கும் வீரர்கள் நீக்கப்படலாம் என்கிறார்கள்.

யார்

யார்

அதன்படி சிஎஸ்கேவின் அடிப்படை அணியில் இருந்து ரெய்னா, பிராவோ நீக்கப்படலாம் என்கிறார்கள். பிராவோ இரண்டு வருடமாக பார்மில் இல்லை. ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்த வருடம் வந்தால் தொடர்ச்சியாக இவர் ஏறக்குறைய இரண்டு வருடம் கிரிக்கெட் ஆடாத கணக்கு வந்துவிடும். இதனால் அடுத்த வருடம் இவரை அணியில் வைத்து இருப்பது சரியாக இருக்காது என்று சிஎஸ்கே கருதுகிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதிலும் அடுத்த 10 வருடங்களுக்கு ஆட போகும் அணியை உருவாக்க போகிறேனென்று தோனி குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கண்டிப்பாக அந்த 10 வருட குரூப்பில் ரெய்னா இருக்க மாட்டார். ரெய்னா அணிக்குள் திரும்பி வந்தாலும் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, November 2, 2020, 13:14 [IST]
Other articles published on Nov 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+