மாறி மாறி விளாசிய பாண்டியா.. விரக்தியோடு பந்து வீசிய ஜடேஜா.. களத்திலேயே நடந்த மோதல்.. ஏன் இந்த பகை?
அபுதாபி: நேற்று சென்னைக்கும் மும்பைக்கு இடையே நடந்த ஐபிஎல் முதல் போட்டியில் களத்தில் ஜடேஜாவிற்கும், பாண்டியாவிற்கும் இடையே நிறைய முறை உரசல் ஏற்பட்டது.
நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வென்றது. மும்பை அணியில், ரோஹித், டி காக், சூரியகுமார் யாதவ் என்று வரிசையாக முக்கிய வீரர்களை விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் 20 ஓவரில் மும்பை 162 ரன்கள் எடுத்தது.
அதன்பின் களமிறங்கிய சென்னை அணி வரிசையாக தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தது. வாஅதன்பின் அம்பதி ராயுடு, டு பிளசிஸ் இருவரும் அதிரடியாக அம்பதி ராயுடு 71 ரன்களும், டு பிளசிஸ் 58 ரன்களும் எடுத்தனர்.மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. 19.2 ஓவரில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நேற்று போட்டி
நேற்று நடந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பாண்டியா அதிரடியாக ஆடினார். கிட்டத்தட்ட ஒருவரிடம் கழித்து இவர் களத்தில் இறங்கிய காரணத்தால் வரிசையாக அடுத்தடுத்து அதிரடியாக ஆடினார். இயல்பாகவே பாண்டியா களத்தில் ''ஷோ மேன்'' போல ஆட கூடியவர். தான் களத்திற்கு வந்தால் நிலைத்து ஆட கூட தேவையில்லை. ஆனால் சிக்ஸர், பவுண்டரி என்று அடிக்க வேண்டும் என்பதே அவரின் ஸ்டைல்.

ஆனால என்ன
நேற்று நடந்த போட்டியில் பாண்டியா இதேபோல் ஆடினார். ஆனால் இவர் மிக முக்கியமாக ஜடேஜா ஓவரைதான் போட்டு வெளுத்து எடுத்தார். ஜடேஜா ஓவரில் நேற்று அதிக ரன் போகவே பாண்டியதான் காரணம். அதுவரை ஸ்பின் பவுலிங் நன்றாகவே இருந்தது. ஆனால் ஜடேஜா ஓவரை பாண்டியா வேண்டும் என்றே மாறி மாறி விளாசி தள்ளினார்.

ஏன் இப்படி
நேற்று பாண்டியா 10 பந்துகள் பிடித்தாலும் 14 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ் அடக்கம். பாண்டியா இப்படி அதிரடியாக ஆட இரண்டு காரணம் உள்ளது.ஒன்று நான் காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். என்னால் அதிரடியாக ஆட முடியும் என்று நிரூப்பிக்கவே இப்படி ஆடினார். இன்னொரு பக்கம் ஜடேஜாவிற்கும் பாண்டியாவிற்கும் பல நாட்களாக இருக்கும் உரசல்.

ஜடேஜா உரசல்
கடந்த உலகக்கோப்பை தொடரிலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் உரசல் இருந்தது. ஜடேஜா தனது இடத்தை பாண்டியாவிடம் இழந்துவிட்டதாக கருதுகிறார். அதேபோல் இந்திய அணியில் இருக்கும் கோலி படை, தோனி படை, ரோஹித் படை என்று மூன்று குழு இருக்கிறது. இதில் தோனி படையில் இருக்கும் ஜடேஜாவிற்கும், ரோஹித்தின் குழுவில் இருக்கும் பாண்டியாவிற்கும் சரியாக ஆகவில்லை என்கிறார்கள்.

களத்திலும் மோதல்
இதனால்தான் நேற்று களத்திலும் பாண்டியா - ஜடேஜா இடையே உரசல் நிலவியது. இரண்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க கூடவில்லை. அதோடு, ஜடேஜா பாண்டியாவிற்கு பவுலிங் செய்யும் போது, விரகதியோடுதான் பவுலிங் செய்தார். ஆனால் தோனி ஜடேஜாதான் பாண்டியா விக்கெட்டை எடுக்க கூடியவர், என்று அவருக்கே மாற்றி மாற்றி ஓவர்களை கொடுத்தார்.

ஜடேஜா ஓவர்
ஜடேஜா ஓவரில் மாறிய மாறி ரன்கள் சென்றது. ஆனாலும் பாண்டியா விக்கெட் கண்டிப்பாக விழும் என்று தொடர்ந்து ஜடேஜாவிற்கு தோனி ஓவர் கொடுத்தார். அதேபோல் பாண்டியா ஜடேஜாவின் பவுலிங்கில் அவுட்டானார். இவர்கள் இருவர்க்கும் களத்தில் உறவு எதுவும் சரியில்லை. அதனால்தான் இருவருமே மோதுவது போல நேற்று விளையாடினார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications