Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இல்லாததுதான் சிக்கல்.. கோலிக்கும் ரோஹித்திற்கும் முட்டியது எப்படி? அந்த ஒரு இடம்தான் காரணம்!

துபாய்: இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்றதுதான் தற்போது தேர்வுக்குழுவில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆட உள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் இந்த தொடருக்கான இந்திய அணி சில நாட்கள் முன் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தேர்வில் நிறைய குளறுபடி இருப்பதாக தற்போது புகார் வைக்கப்பட்டுள்ளது.

புகார்

புகார்

அதன்படி இந்திய அணியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இல்லை. முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடும் இஷான் கிஷான் இல்லை. ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வரும் ரானா, சூர்ய குமார் யாதவ் அணியில் இல்லை. பல முக்கிய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

ஆனால் முதல் தர போட்டிகளில் பெரிய ரெக்கார்ட் இல்லாத சஞ்சு சாம்சன் இந்திய அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். முதல் தர போட்டிகளில் அதிக வருடம் ஆடாத வருண் சக்ரவர்த்தி, சைனி போன்ற வீரர்களும் கூட அணியில் எடுக்கப்பட்டு உள்ளனர்.இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணம் ஆகியுள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

கோலி முக்கியமான வீரர்களை அணியில் எடுக்கவில்லை. ஆர்சிபி வீரர்களுக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார். அணியில் முக்கியமான வீரர்கள் பலர் புறக்கணிக்கப்படுகிறார்கள். மும்பை அணியில் விளையாடும் வீரர்கள் எடுக்கப்படவில்லை. ரோஹித் சர்மாவை ஓரம் கட்டுகிறார் என்று புகார்கள் வைக்கப்பட்டது. கோலி மீது இப்படி கடுமையான புகார்கள் வைக்கப்படுகிறது.

காரணம்

காரணம்

இதற்கெல்லாம் காரணம் தோனியின் ஓய்வுதான் என்றும் கூறுகிறார்கள். இந்திய அணியில் தோனி இருந்த வரை அவர் அணி தேர்வில் முக்கிய முடிவுகளை எடுப்பார். கேப்டனாக இல்லையென்றால் தோனி அணி தேர்வில் பெரிய அளவில் பங்கு வகித்தார். இதனால் இந்திய அணியில் பல ஐபிஎல் அணி வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது அணியில் ஆடும் சாகருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது தோனிதான்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது அணியில் தோனி இல்லை. இதனால் கோலி- ரோஹித் சர்மா இடையே அணி தேர்வில் ஈகோ யுத்தம் ஏற்பட்டுள்ளது. யாருக்கு நெருக்கமான வீரரை அணியில் எடுப்பது என்று மோதல் எழுந்துள்ளது. மும்பையா

பெங்களூரா என்ற யுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அணி தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதிலும் தற்போது தோனியின் இடமும் இந்திய அணியில் காலியாக உள்ளது. இந்த இடத்தில் யாரை கீப்பராக கொண்டு வர வேண்டும் என்றும் விவாதம் நடந்து வருகிறது. ரோஹித் சர்மா இஷான் கிஷானையும், கோலி கே. எல் ராகுலையும் இந்த இடத்திற்கு கொண்டு வர முயன்று வருகிறார். இந்த இடமும் கூட.. இரண்டு பேரின் உரசலுக்கு காரணமாக இருக்கிறது.

Story first published: Saturday, October 31, 2020, 8:23 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+